"DINK.." அமெரிக்கா முதல் ஜப்பான் வரை.. உலக நாடுகளுக்கு எமனாக நிற்கும் டிரெண்ட்.. தடுக்கவே முடியல!
டெல்லி: இந்த நவீன உலகில் திடீர் திடீரென புது புது விஷயங்கள் டிரெண்டாகும். பெரும்பாலும் இவை யாருக்கும் ஆபத்தைத் தராது. ஆனால், இப்போது டிரெண்டாகும் ஒரு விஷயம் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அமெரிக்கா தொடங்கிப் பல சர்வதேச நாடுகள் என்ன செய்வதென்றே புரியாமல் உள்ளன. அது என்ன டிரெண்ட்.. இதன் சிக்கல் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை அதிகரித்த நிலையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

குறிப்பாக மக்கள் தொகை அதிகரிப்பதால் வரும் பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மக்கள் தொகை தினமும் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நாளும் ஜூலை 11ம் தேதி மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மக்கள்தொகை: கடந்த நூற்றாண்டில் மக்கள் தொகை உயர்வது பிரச்சினையாக இருந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. சீனா, இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கின.
குறிப்பாகச் சீனா ஒரு குழந்தை கொள்கையை ரொம்பவே ஸ்ட்ரிக்டாக கடைப்பிடித்தது. இதனால் அந்த நாட்டில் மக்கள் தொகை கட்டுக்குள் வந்தது. இப்போது அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் லிஸ்டில் சீனாவை இந்தியா ஓவர்டேக்கும் செய்துவிட்டது. இப்படிப் பல நாடுகள் மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
மாறிய டிரெண்ட: அதேநேரம் இந்த நூற்றாண்டில் டிரெண்ட் மாறிவிட்டது. மக்கள் தொகை சரிவதே உலக நாடுகளுக்குப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, பிரேசில் ஆகிய நாடுகளில் மக்கள் தொகை படுவேகமாக சரிந்து வருகிறது. இதே டிரெண்ட் தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பல நாடுகளில் ஆளே இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு நிலைமை சென்றுவிடும். ஏற்கனவே ஜப்பான், தென் கொரியா, இத்தாலி நாடுகளில் முக்கிய நகரங்களைத் தவிர பெரும்பாலான சிறு நகரங்கள், கிராமங்கள் ஆளே இல்லாத கோஸ்ட் ஊர்களாக மாறிவிட்டன.

இதனால் உலகின் பல நாட்டு அரசுகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், அதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை. இளைஞர்களிடையே மாறி வரும் புதிய டிரெண்ட் தான் இதற்கு முக்கிய காரணமாகும். அப்படி என்ன டிரெண்ட் என கேட்கிறீர்களா.. அது தான் DINK.
DINK: Dual Income, No Kids என்பதன் சுருக்கமே இந்த DINK.. அதாவது கணவன்- மனைவி அல்லது லிவ் இன் பார்ட்னர்கள் குழந்தைகள் வேண்டாம் என முடிவெடுப்பதே இந்த DINK.. இருவரும் வேலைக்குச் செல்வதால் குடும்பத்தினர் வருமானம் இரட்டிப்பாகும். குழந்தை இல்லை என்பதால் குழந்தை பராமரிப்பு செலவுகள் இருக்காது என்பதே இதன் நோக்கமாகும். கேரியருக்கு அதிக முக்கியத்துவம், தனிப்பட்ட சுதந்திரம், குழந்தை பராமரிப்பு, படிப்பிற்கு ஆகும் செலவுகள் அதிகரிப்பது உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தை வேண்டாம் எனத் தம்பதிகள் முடிவெடுப்பது அதிகரித்துள்ளது.
அதேபோல இன்னும் சிலர் DINKWAD என்பதைத் தேர்வு செய்கிறார்கள். இவர்களும் DINKகளை போலத் தான்.. ஆனால், நாய்கள் வளர்ப்பார்கள்.. Double Income, No Kids, With A Dog என்பதன் சுருக்கமே DINKWAD ஆகும். இன்னும் சிலர் உலகம் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாசமாகி வரும் நிலையில், அதனால் குழந்தை வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். இதை Green Inclination, No Kids அதாவது GINK என்கிறார்கள்.
இந்தியாவில் அதே சிக்கல்: ஏதோ அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தான் டிரெண்ட் என நினைக்க வேண்டாம். இந்தியாவிலும் கூட கணிசமான அளவுக்குத் தம்பதிகள் இந்த முடிவை எடுக்கிறார்களாம். இந்தியாவில் இந்த DINKகளின் மக்கள்தொகை ஆண்டுக்கு 30% அதிகரித்து வருகிறதாம். முன்பு தான் குழந்தை கட்டாயம் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது பெருநகரங்களில் குழந்தைகள் இல்லை என்றாலும் அந்த தம்பதிகளை ஒதுக்கிவைக்கும் போக்கு குறைந்துள்ளன.
ஏன் பிரச்சினை: இந்த DINK டிரெண்ட் தான் உலக நாடுகளுக்கு வில்லனாக மாறியுள்ளது.. ஏற்கனவே அமெரிக்கா தொடங்கி இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் என பல்வேறு நாடுகளும் மக்கள் தொகை சரிவதைச் சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அதை மேலும் ஊக்குவிப்பதாக அமைகிறது இந்த DINK டிரெண்ட். இதை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் உலக நாடுகள் குழம்பி நிற்கின்றன.












Click it and Unblock the Notifications