சமீபத்தில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. இந்தியாவை இணைத்துவிட்டார் மோடி.. அட.. சொல்வது 'டைம்' இதழ்
வாஷிங்டன்: நரேந்திர மோடி பிளவுவாதிகளின் தலைவர் என்று அமெரிக்காவின் முன்னணி இதழ், 'டைம்' தெரிவித்திருந்த நிலையில், இப்போது அதே இதழின், வெப்சைட்டில் சமீபத்தில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத அளவுக்கு இந்தியாவை மோடி இணைத்துள்ளார் என்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை டைம் வெப்சைட்டில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோடி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டதோடு, தனக்கு கிடைத்த ஆதரவு வட்டத்தையும் அதிகரித்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டு அந்த கட்டுரை விளக்கமாக மோடியின் வெற்றிக்கான காரணங்கள் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த மீடியா நிறுவனமான, இந்தியா ஐஎன்சி, தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான, மனோஜ் லட்வா இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அதை டைம் வெப்சைட் வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடி அரசு, 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு, அமல்படுத்தியபோது அது மக்களை பாதித்தது என்றாலும்கூட, அது குறுகிய கால பாதிப்புத்தான். இதன் பிறகு பல்வேறு விஷயங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. வரி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கப்பட்டது. ஜன்தன் திட்டம் போன்றவை ஏழைகளுக்கு பலன் அளித்தன என்று வரிசைப்படுத்தியுள்ளது கட்டுரை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின், தலைவராக மோடி தனது இரண்டாம் பதவி காலத்திற்கு வந்தாலும், இன்னும் பணிகள் நிறைய பாக்கி உள்ளது. சமீப காலத்தில் எந்த பிரதமரும் இணைக்காத அளவுக்கு இந்தியாவை இணைத்து ஆதரவை பெற்றுள்ளார் மோடி, என்று எழுதியுள்ளார் லட்வா.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐ.நா. உட்பட, பல்வேறு அமைப்புகளும், மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்து வருகின்றன.
"மோடியின் இந்தியா அதன் அளவு மற்றும் திறன் ஆகியவற்றிற்கு தகுதியான ஒரு விகிதத்தில் இப்போதுதான் முன்னேறி வருகிறது". "சமூக அமைதியின்மை சம்பவங்களின் போது மௌனமாக இருப்பதற்காக மோடியை விமர்சித்திருக்கலாம். ஆனால் இந்தியாவின் சில பிரிவினரின் பிரிச்சினைகளுக்கான, மூல காரணங்களை நேரடியாக சரி செய்ததற்காக, இந்திய வாக்காளர்களால் வாக்குப்பதிவு இயந்திரத்தில், மோடிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவிற்கான, மோடியின் கனவு இன்னும் அப்படியேதான் உள்ளது, "என லட்வா கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய பத்திரிக்கையாளர் தவ்லீங் சிங், மற்றும் மறைந்த பாகிஸ்தானிய அரசியல்வாதியுமான சல்மானான் தசீரின் மகனான ஆதிஷ் தசீர் எழுதிய 'இந்தியாவின் பிளவுவாதி தலைவர்' என்ற தலைப்பிலான கட்டுரை, இந்த மாத தொடக்கத்தில் டைம் இதழின் கவர் செய்திக் கட்டுரையாக வெளியாகியிருந்தது.
இவர் பாகிஸ்தானை சேர்ந்தவரின் மகன் என்பதால், இப்படியான கட்டுரையை எழுதிவிட்டார் என பாஜக குற்றம்சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications