மண்டியிட்ட நெதன்யாகு.. கத்தார் பிரதமரிடம் மன்னிப்பு.. White house-ல் இருந்தே போன்போட வைத்த டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 9 ம் தேதி இஸ்ரேல் தனது விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. கத்தார் நட்பு நாடு என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்தார். இந்நிலையில் தான் வெள்ளை மாளிகையில் நேற்று டொனால்ட் டிரம்பை சந்தித்தார் நெதன்யாகு. அப்போது கத்தாரிடம் மன்னிப்பு கேட்கும்படி டிரம்ப் பிரஷர் கொடுத்தார். இதையடுத்து நெதன்யாகு வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசியில் கத்தார் பிரதமர் செய்க் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரினார்.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் வகையில் இந்த போரை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. கடந்த 9 ம்தேதி நள்ளிரவில் திடீரென்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

after-trump-pressure-israel-pm-benjamin-netanyahu-calls-from-white-house-to-qatar-pm-apologies-for

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா (Khalil Al-Hayya) என்பவர் தோஹாவில் பதுங்கியுள்ள நிலையில் அவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கலில் அல் ஹயா தப்பினார். இருப்பினும் அவரது மகன் ஹமாம் அல் ஹயா, அவரது அலுவலக இயக்குநராக செயல்பட்டு வந்த ஜிகாத் லுபத், 3 பாதுகாவலர்கள், ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது. அமெரிக்காவை பொறுத்தவரை இஸ்ரேல் நெருங்கிய நட்பு நாடு. அதேபோல் கத்தாரும் அமெரிக்காவுக்கு நட்பு நாடாக உள்ளது. கத்தாரில் அமெரிக்காவின் விமானப்படை தளம் கூட உள்ளது.

இப்படி இருக்கும்போது கத்தார் தலைநகர் தோஹாவை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தியது டிரம்புக்கு பிரஷரை ஏற்படுத்தியது. மேலும் கத்தார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. தாக்குதல் பற்றி முன்கூட்டி அறிந்தும் உடனடியாக தகவல் அளிக்க அமெரிக்கா தவறிவிட்டதாக கூறி கத்தார் தனது அதிருப்தியை காட்டியது.

இதனால் டென்ஷனான டிரம்ப், நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். அதுமட்டுமின்றி தோஹா தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா, ‛‛இஸ்ரேல் தன்னிச்சையாக செயல்பட்டு இந்த தாக்குதலை நடத்தியது'' என்று விளக்கம் அளித்தது. இது ஒருபுறம் இருக்க மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ‛நேட்டோ' போன்ற ஒரு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கும். இதனை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்தது.

இப்படியான சூழலில் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நேற்று சந்தித்து பேசினார். அப்போது காசா போர் நிறுத்தம் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் பற்றி விவாதித்தனர். இந்த வேளையில் கத்தார் தலைநகர் தோஹா மீதான தாக்குதலை டிரம்ப் கண்டித்தார். மேலும் கத்தார் பிரதமரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெதன்யாகுவிற்கு பிரஷர் கொடுத்துள்ளார்.

இதையடுத்து வேறு வழியின்றி டிரம்ப் உடனான சந்திப்பு முடிந்த பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசியில் கத்தார் பிரதமர் செய்க் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛‛ இஸ்ரேல் - கத்தார் உறவு பற்றி டிரம்ப் அதிருப்தியடைந்தார். அதுதொடர்பான கவலைகளை பகிர்ந்தார். இருநாடுகள் இடையே பல ஆண்டுகளாக இருக்கும் பரஸ்பர குறைகள் மற்றும் தகவல் பரிமாற்ற குளறுபடியை களைந்து நேர்மறையான உறவை உருவாக்குவதற்கான விருப்பத்தை வெளிக்காட்டினார்.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து நெதன்யாகு, கத்தார் பிரதமருக்கு போன் செய்தார். தோஹா தாக்குதலுக்கு நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை மீண்டும் நடத்தமாட்டேன் என்று உறுதியளித்தார். அதேபோல் இந்த மன்னிப்பை கத்தார் பிரதமர் அல் - தானி வரவேற்றார். பிராந்திய பாதுகாப்புக்கு அர்த்தமுள்ள வகையில் தங்கள் நாட்டின் பங்களிப்பை தர விரும்புவதாக அவர் உறுதி கூறினார்'' என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நெதன்யாகு மன்னிப்பு கேட்டதை கத்தாரும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக கத்தாரின் வெளியுறவு அமைச்சகம், ‛‛இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கத்தார் பிரதமருடன் தொலைபேசியில் பேசி தோஹா தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார்'' என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+