Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாட்டரியில் ரூ.17 ஆயிரம் கோடி வென்ற நபர்.. வரிகள் மட்டும் இவ்வளவா? காரசாரமாக விவாதித்த நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக வரலாற்றிலேயே மிக அதிகமான தொகையை லாட்டரியில் பரிசாக வென்றுள்ளார் அமெரிக்காவை சேர்ந்தவர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி பரிசை வென்று இருக்கிறார். தற்போது அவருக்கு வரியாக பிடித்தம் செய்த பிறகு எவ்வளவு தொகையை பெற்று இருப்பார் என்பது குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வருவது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. உண்மையில் அதிர்ஷ்டம் என ஒன்று இருக்கிறதா? என்பது தனி விவாதத்திற்கு உட்பட்டது. அடுத்த வேளை உணவுக்கு கூட என்ன செய்வதென்று தடுமாறிக் கொண்டவர்களுக்கு திடீரென ஓவர்நைட்டில் வாழ்க்கையே மாற்றிவிடும் சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

altadena-man-who-won-2-04-billion-powerball-lottery-shocking-tax-deductions-revealed-after-3-years

லாட்டரி பரிசு

இதற்கு சிறந்த உதாரணமாக லாட்டரியை சொல்லலாம். இதைத்தான் அதிர்ஷ்டம் என்றும் சிலர் சொல்கிறார்கள். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் லாட்டரி டிக்கெட்டுகள் பிரபலமாக உள்ளன. அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. அங்குள்ள பவர்பால் லாட்டரியில் இந்திய மதிப்பில் பல ஆயிரம் கோடி பரிசுத்தொகை அடிக்கும் செய்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவதை பார்க்க முடியும்.

ரூ.17 ஆயிரம் கோடி பரிசு

அந்த வகையில் சர்வதேச அளவில் லாட்டரி வரலாற்றிலேயே அதிக தொகையாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்வின் கஸ்ட்ரோ என்பவர் பரிசாக வென்றார். அவர் வென்ற பரிசுத்தொகை மட்டும் தலையே சுற்றிவிடும். அதாவது, $2.04 பில்லியன் வென்றார். இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 17,034 கோடி ஆகும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபருக்கு கூட இல்லாத அளவிற்கு பெரும் செல்வந்தராக ஓவர்நைட்டில் ஆனார்.

இது நடந்து சரியாக மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தற்போது அவர் வென்ற பரிசுத்தொகை குறித்த விவாதங்கள் ரெட்டிட் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவி வருகிறது. அதாவது லாட்டரியில் பரிசு வென்றால் அதில் பெருமளவு தொகையாக வரியாகவே போய்விடும் என்று சில நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க, சில நெட்டிசன்களோ இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

$1 பில்லியனுக்கும் குறைவாகவே கிடைத்தது

பவர்பால் லாட்டரியை பொறுத்தவரை 30 வருடங்களுக்கு வருடாந்திர முறையில் பெறும் ஆப்ஷனும் உள்ளது. ஆனால் இதனை எடுக்காமல் மொத்த தொகையை எடுக்க எட்வின் கஸ்ட்ரோ முடிவு செய்தார். இதனால், அவரது பரிசுத்தொகையில் இருந்து அமெரிக்க பெடரல் அரசு 24 சதவீத வரியை, சுமார் $239 மில்லியன், பிடித்தது. காஸ்ட்ரோ தனது வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, அவர் 37 சதவீத அதிகபட்ச மத்திய வரி விகித வரம்புக்குள் வந்தார்.

இவை அனைத்தையும் கணக்கிட்டால் சுமார் $369 மில்லியனாக வரியாக உயர்ந்தது. இதன் பின்னர், அவரிடம் $628.5 மில்லியன் எஞ்சியது. கலிஃபோர்னியாவில் லாட்டரி வருமானத்திற்கு வரி இல்லை, இதனால், அங்கு வரி செலுத்துவதில் இருந்து தப்பினார். மொத்தமாக சுமார் $628 மில்லியன் பெற்றார் என்கிறது புள்ளிவிவரங்கள்.

கையில் எவ்வளவு கிடைத்தது

இதன்படி பரிசுத்தொகை $2 பில்லியன் என்றாலும், வரிகள் போக, $1 பில்லியனுக்கும் குறைவாகவே கிடைத்தது என்று சிலர் கருத்துகளை கூறினர். சில நெட்டிசன்கள் இது ஒன்றும் அவ்வளவு பெரிய தொகை இல்லை எனவும் கூறி வருகின்றனர். பரிசுத்தொகை வென்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இது தொடர்பான தகவல்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+