"ஐ லவ் யூ அமெரிக்கா.." கண்ணீருடன் வெளியேற்றப்பட்ட இந்திய பிரபலம்! உண்மையில் என்ன நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு, அங்கு வாழும் வெளிநாட்டினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அப்படித் தான் அங்கு வேலை செய்து வந்த இந்திய இன்ஸ்டா பிரபலம் ஒருவர் வேலை இழந்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அவர் கண்ணீருடன் அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர் மீது கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றவர்கள் இதனால் அதிகக் கெடுபிடிகளைச் சந்தித்து வருகிறார்கள். அப்படித் தான் இப்போது இந்திய இன்ஸ்டா பிரபலம் ஒருவர் வேறு வழியில்லாமல் அமெரிக்காவில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இன்ஸ்டா பிரபலம்
அனன்யா ஜோஷி என்ற இன்ஸ்டா பிரபலம் குறித்து நெட்டிசன்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். அமெரிக்காவில் வேலை தேடிவந்த அந்த பெண், அது தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் எடுத்துப் பதிவிட்டு வந்தார். இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரியளவில் பாலோயர்ஸ்கள் உள்ளனர்.
கண்ணீருடன் வெளியேறினார்
இதற்கிடையே அமெரிக்காவில் ஏற்ற வேலை கிடைக்காததால் அனன்யா ஜோஷி அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். கண்ணீருடன் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் வீடியோவை கடந்த செப்டம்பர் 29ம் தேதி அனன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவை விட்டு வெளியேறுவது என்பது தனது வாழ்க்கைப் பயணத்தில் எடுத்த மிகவும் கடினமான படி என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் கிடைத்த அனுபவங்களும், நிதி சுதந்திரமும் தனது வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருந்ததாகக் கூறிய அவர், இதனால் அமெரிக்கா எப்போதும் தனது முதல் வீடாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவில் இருந்து வெளியேறும்போது ஏற்பட்ட வேதனையைத் தாங்கவே முடியவில்லை என்று ஜோஷி ஒப்புக்கொண்டார்.
நெகிழ்ச்சி பதிவு
அந்த வீடியோவில் அவர் மேலும், "இது எனது பயணத்தின் கடினமான ஒரு படி. இந்த உண்மையை நான் ஏற்றுக்கொண்டாலும், இந்த நாளுக்காக எதுவும் என்னைத் தயார்ப்படுத்தவில்லை. நிதி சுதந்திரம் பெற்ற ஒரு நபராக என்னை மாற்றியது அமெரிக்கா தான். இதனால் அமெரிக்கா தான் எப்போதும் எனது முதல் வீடாக இருக்கும். அது எப்போதும் எனக்கு ஒரு சிறப்புமிக்கதாகவே இருக்கும். குறுகிய காலமாக இருந்தாலும், நீங்கள் எனக்குக் கொடுத்த அனுபவத்தை நான் மறக்க மாட்டேன் அமெரிக்கா, ஐ லவ் யூ" என்று பதிவிட்டுள்ளார்.
என்ன காரணம்!
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் 2024ல் பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்ற ஜோஷி, அதன் பிறகு F-1 மாணவர் விசாவில் இருக்கும் ஆப்ஷனல் பயிற்சித் திட்டத்தின் (Optional Practical Training) கீழ் ஒரு பயோடெக் ஸ்டார்ட்அப்பில் வேலைக்குச் சேர்ந்தார்.. சமீபத்தில் தான் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு புதிய வேலை தேடும் முயற்சியில் இறங்கினார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக அவர், "எங்கள் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நான் வேலையிலிருந்து நான் நீக்கப்பட்டேன். எனது STEM OPT காலம் குறைவாக இருப்பதால், சீக்கிரம் அமெரிக்காவில் ஒரு வேலைக்குச் சேர வேண்டும். இல்லை என்றால் என்னால் இங்குத் தொடர்ந்து தங்க முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.
எஃப்-1 விசா
பல முயற்சிகளுக்குப் பிறகும், அவருக்குப் பொருத்தமான வேலை கிடைக்காததால், நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதன்படியே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்காவில் F-1 விசாவில் இருக்கும் சர்வதேச மாணவர்கள், தாங்கள் படித்த துறையில் 12 மாதங்கள் வரை தற்காலிகமாக வேலை செய்ய F-1 விருப்ப பயிற்சித் திட்டம் (OPT) அனுமதிக்கிறது. அதில் தான் அனன்யா வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், வேலையை இழந்ததால் வேறு வழியில்லாமல் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications