அமெரிக்கா ஜார்ஜ் பிளாய்ட் படுகொலை.. போலீசுக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை தண்டனை.. நீதிமன்றம் உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் முழங்காலால் அழுத்தி கொடூரமாக கொன்ற மாஜி போலீஸ்காரருக்கு இருபத்தி இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு வழக்கில் அவரது பொது உரிமையை காக்க தவறியதாக கூறி மீண்டும் 21 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அமெரிக்காவில் இனபாகுபாடு பிரச்சனையை அவ்வப்போது ஏற்படுகிறது. இதில் சிலர் கொலை செய்யப்படுவதுடன், வன்முறைகளும் அரங்கேறிய வரலாறு உண்டு.
இந்நிலையில் தான் அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸ்காரர் தனது காலால் மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கழுத்தில் முழங்காலால் அழுத்திய போலீஸ்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 25ல் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்(46) சென்று கொண்டிருந்தார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படத்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் டெரிக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், ஜார்ஜ் பிளாய்டை கீழே தள்ளி ஷு காலால் மிதித்தார். மேலும் முழங்காலால் அவரது கழுத்தில் சுமார் 9 நிமிடம் வரை அழுத்தினார்.

இறந்து போன ஜார்ஜ் பிளாய்ட்
இதில் மூச்சு விட முடியாமல் தவித்து ஜார்ஜ் பிளாய்ட் துடிதுடித்து இறந்தார். இதுதொடர்பான வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாருக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து டெரிக் சவுவின் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை வழக்கில் தண்டனை
மேலும் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து டெரிக் சவுவின் போலீஸ் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கொலை வழக்கு தொடர்பாக டெர்ரக் சவுவிக்கு இருபத்து இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

பொது உரிமை மீறியதாக வழக்கு
இந்நிலையில் தான் ஜார்ஜ் பிளாய்ட்டின் பொது உரிமைகளை (சிவில் ரைட்ஸ்) பாதுகாக்க தவறியதோடு, அதனை மீறியதாக டெரிக் சவுவினுக்கு எதிராக ஒரு வழக்கு நீதமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது 20 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜார்ஜ் பிளாய்டின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதம் செய்தார். வாதத்தை கேட்ட நீதிபதி டெர்ரக் சவுவிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இருப்பினும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications