பிரஷரை கொடுக்கும் டிரம்ப்.. ரஷ்யாவை தாக்கவே முடியாமல் முடங்கும் உக்ரைன்! அமெரிக்கா பிளான் தான் என்ன?
வாஷிங்டன்: உக்ரைன் போர் விவகாரத்தில், அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதற்கிடையே இந்தப் போர் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு மறைமுக அழுத்தத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.. இதனால் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடுவதில் உக்ரைனுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதல் தொடங்கிய சமயத்தில் இருந்தே உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து வந்தது. ஆனால், டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு முதலில் ஆயுதங்களைத் தர மாட்டோம் என்றெல்லாம் சொல்லி வந்தார். இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டு வர புதின் பிடி கொடுக்காததால் மீண்டும் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் ஆயுதங்களைக் கொடுக்க ஆரம்பித்தது.

திடீர் மாற்றம்
இதில் தான் இப்போது திடீர் மாற்றம் நடந்துள்ளது. அதாவது ரஷ்யாவிற்குள் தொலைதூரம் ஊடுருவி இலக்குகளைத் தாக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ராணுவ ஏவுகணை அமைப்புகள் உக்ரைனுக்கு டிரம்ப் நிர்வாகம் கொடுத்திருந்தது. ஆனால், இப்போது அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்க ராணுவம் ரகசியமாகத் தடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. வலிமையான ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்பதால் இது உக்ரைனுக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும்.
அமெரிக்கா அழுத்தம்
மூன்றாண்டுகளாக நடக்கும் இந்தப் போரில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாததால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தியில் இருக்கிறார். இந்த நேரத்தில் அமெரிக்க ராணுவம் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக வெளியாகும் தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி டிரம்ப் - புதின் இடையே உச்ச மாநாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்களையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் டிரம்ப் சந்தித்துப் பேசியிருந்தார். அதன் பிறகு போர் முடிவுக்கு வந்ததாக நல்ல செய்தி வரும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அதன் பிறகு அதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
டிரம்ப்
இதனால் அதிருப்தி அடைந்துள்ள டிரம்ப், ரஷ்யா மீது கூடுதலாகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறினார். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்கப் போகிறேன்.. அது மிக முக்கியமான முடிவாக இருக்கும். அது பெரிய பொருளாதாரத் தடைகளாக இருக்கலாம்.. அல்லது பெரிய வரிகளாக இருக்கலாம்.. அல்லது இரண்டுமே கூட இருக்கும்" என்று பேசியிருந்தார்.
சிக்கல் என்ன!
டிரம்ப் புதின் இடையே நடந்த உச்சி மாநாட்டில் போர் நிறுத்தம் செய்ய புதின் சில கட்டுப்பாடுகளை விதித்தாக கூறப்படுகிறது. குறிப்பாகச் சில பிராந்தியங்களை ரஷ்யாவுக்கு ஒப்படைக்க வேண்டும். நேட்டோவில் இணையக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை புதின் விதித்துள்ளார். இதில் மற்ற கட்டுப்பாடுகள் கூட ஓகே என்றாலும் பிராந்தியங்களை விட்டுத் தரும் வகையில் அமைதி ஒப்பந்தம் எதற்கும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பதை ஜெலன்ஸ்கி தெளிவாகக் கூறிவிட்டார்.
இதுபோல பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டே இருப்பதால் தான் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தச் சூழலில் தான் உக்ரைனுக்கு அமெரிக்கா மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications