தொட்டிலில் மகனுக்கு பக்கத்தில் பேய்.. போட்டோ வெளியிட்ட அம்மா.. கோபத்தில் நெட்டிசன்கள்

தொட்டிலில் பேய் இருந்ததாக போட்டோ வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த அம்மா ஒருவர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் தன் மகனின் தொட்டிலில் பேய்க் குழந்தை ஒன்று படுத்திருப்பதாக தாய் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் இல்லினாய்ஸைச் சேர்ந்தவர் மரிட்ஸா சிபுல்ஸ். இவருக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு தன் மகனை தொட்டிலில் தூங்க வைத்துள்ளார் மரிட்ஸா. பின்னர் தான் தூங்கப் போவதற்கு முன் தன் மகனுடைய தொட்டியை மானிட்டரில் பார்த்துள்ளார்.

american mum freaks out on seeing ghost in sons crib

அப்போது தனது மகனுக்கு அருகில் மற்றொரு கைக்குழந்தை ஒன்று படுத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் மரிட்ஸா. அதனை 'பேய் குழந்தை' என முடிவு செய்த அவர், அதனை புகைப்படமாக பதிவு செய்துள்ளார்.

தனக்கு பேய் நம்பிக்கை இல்லையென்றாலும், அந்த புகைப்படம் தன்னை மிகவும் பீதியூட்டியதாகக் கூறி இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார் மரிட்ஸா. கருப்பு வெள்ளையில் மரிட்ஸா வெளியிட்டிருந்த அந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் ஷேர் செய்தனர். சுமார்5 லட்சம் கமெண்டுகள் பதிவானது.

அந்தப் புகைப்படம் சமூகவலைதளப் பக்கத்தில் விவாதப் பொருளாக மாறியது. சிலர் நிஜமாகவே அது பேய் தான் என்றனர். மற்றும் சிலரோ அது நிச்சயம் பேய் இல்லை, வேறு ஏதோ என வாதிட்டனர்.

மறுநாள் காலை இந்த விவாவதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மரிட்ஸா மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில், தன் மகனுக்கு பக்கத்தில் பேய் என நினைத்தது மெத்தையில் இருந்த புகைப்படத்தைத் தான் என அவர் புகைப்படத்துடன் விளக்கம் அளித்திருந்தார்.

சம்பவத்தன்று மெத்தையின் மேல் உறையை மரிட்ஸாவின் கணவர் மாற்றுவதற்காக கழற்றியுள்ளார். ஆனால் வேறொரு உறை போட அவர் மறந்து விட்டார். இதனால் மெத்தையில் இருந்த குழந்தையின் படம், சரியாக அவர்களது மகனுக்கு பக்கத்தில் படுத்திருப்பது போல் அமைந்து விட்டது.

இதை பேஸ்புக்கில் எழுதி சிரிக்கும் எமோஜிகளை வெளியிட்டுள்ள மரிட்ஸா, செல்லமாக தனது கணவரையும் திட்டியுள்ளார்.

ஆனால் மரிட்ஸாவின் இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், 'இது அவர் வேண்டுமென்றே செய்த வேலை' எனத் திட்டியுள்ளனர். முதலில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்க்கும் போது, வேண்டுமென்றே மெத்தையில் இருக்கும் குழந்தையின் புகைப்படத்திற்கு அருகில் சிறுவனைப் படுக்க வைத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் தங்களது செட்டப் தெரிந்து விடாமல் இருக்க, புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு போர்வை போர்த்தியது போன்று அவர்கள் செட்டப் செய்துள்ளனர்.

அதோடு, நிஜமாகவே மானிட்டரைப் பார்த்து பேய் எனப் பயந்திருந்தால், விடியும் வரை காத்திருந்தா தங்களது சந்தேகத்தை தீர்த்துக் கொண்டிருப்பர். உடனடியாக தன் மகனை தொட்டிலில் இருந்து தூக்கி இருந்தாலே உண்மை தெரிந்திருக்குமே என அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, மரிட்ஸா ஒரே நாளில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே மக்களை குழப்பி, பீதியடையும் வகையிலான இந்தப் புகைப்படத்தை வெளியிட்டதாக நெட்டிசன்கள் அவரைத் திட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+