Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க அதிபர் தேர்தல்.. உள்கட்சியிலிருந்து வந்த முதல் போட்டி..களமிறங்கும் நிக்கி ஹேலி..யார் இவர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதேகட்சியை சேர்ந்த பெண் நிர்வாகியான நிக்கி ஹேலியும் களமிறங்க போவதாக அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை அவர் இப்போதே தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் தான் குடியரசு கட்சியில் அவருக்கு கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் மட்டுமின்றி மேலும் சில நிர்வாகிகள் அதிபர் பதவி மீது கண் வைத்துள்ள நிலையில் தற்போது நிக்கி ஹேலி எனும் பெண் நிர்வாகி வெளிப்படையாக அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது சிறப்பு.

அமெரிக்க அதிபராக ஜோபைடன் உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளார். அமெரிக்காவை பொறுத்தமட்டில் அதிபரின் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகள் மட்டுமே.

கடந்த 2020ல் அதிபர் தேர்தல் நடந்த நிலையில் 2021 ஜனவரியில் ஜோபைடன் அதிபராகவும், கமலா ஹாரீஸ் துணை அதிபராகவும் பொறுப்பேற்று கொண்டனர்.

2024ல் அமெரிக்க அதிபர் தேர்தல்

2024ல் அமெரிக்க அதிபர் தேர்தல்

இந்த தேர்தலில் ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு குடியரசு கட்சியின் வேட்பாளரும், அப்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தினார். தற்போது அதிபராக ஜோபைடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருடைய பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தான் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

ட்ரம்புக்கு எதிர்ப்பு

ட்ரம்புக்கு எதிர்ப்பு

மேலும் குடியரசு கட்சி சார்பில் வேறு யாரும் தனக்கு போட்டியாக வந்து விடாமல் தடுக்கும் பணியில் டொனால்ட் ட்ரம்ப் கவனம் செலுத்தி வருகிறார். அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இதில் முன்கூட்டியே தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது ஒருபுறம் இருந்தாலும் 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பல நிர்வாகிகள் போட்டியிட விரும்பலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.

நிக்கி ஹேலி விருப்பம்

நிக்கி ஹேலி விருப்பம்

இந்நிலையில் தான் தற்போது குடியரசு கட்சியிலேயே டொனால்ட் ட்ரம்புக்கு போட்டியாக பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளார். நிக்கி ஹேலி என்பவர் 2024 அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்புவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.

வீடியோவில் இருப்பது என்ன?

வீடியோவில் இருப்பது என்ன?

வீடியோவில் நிக்கி ஹேலி, ‛‛நான் நிக்கி ஹேலி. நான் 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன். இது ஒரு புதிய தலைமுறை தலைமைக்கான நேரம் என நினைக்கிறேன். நிதி நிலைமையை மேலும் மேம்படுத்துவதற்கான வழியை கண்டுபிடிக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தற்போது அவசியமானதாக உள்ளது. சீனாவும், ரஷ்யாவும் எதிரணியாக அணிவகுத்து நிற்கின்றன. அவர்கள் நம்மை உதறிதள்ள நினைக்கிறார்கள். இதனை பொறுத்து கொள்ளும் ஆள் நான் இல்லை'' என்பன உள்ளிட்ட பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.

யார் இந்த நிக்கி ஹேலி?

யார் இந்த நிக்கி ஹேலி?

மேலும் வரும் நாட்களில் இதுதொடர்பான பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு போட்டியாக அந்த கட்சியின் நிக்கி ஹேலி முதல் ஆளாக இணைந்துள்ளார். இவர் அமெரிக்காவின் தென் கரோலினாவின் ஆளுநராக செயல்பட்டுள்ளார். மேலும் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது ஐநா சபையின் அமெரிக்க தூதராக பணியாற்றினார். இவர் இந்தியாவின் பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவராகும். இவரது தந்தை அஜித் சிங் மற்றும் தாய், முதலில் கனடாவில் குடியேறிய நிலையில், 1960களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் போட்டி

அதிகரிக்கும் போட்டி

குடியரசு கட்சியை பொறுத்தமட்டில் 2024 அதிபர் பதவிக்கான போட்டியில் நிறைய பேர் உள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் முதல் நபராக விருப்பம் தெரிவித்த நிலையில் தற்போது நிக்கி ஹேலியும் அதிபர் பதவியை விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுதவிர புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ், முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், தென் கரோலினாவின் அமெரிக்க செனட்டர் டிம் ஸ்காட், நியூ ஹாம்ப்ஷயர் ஆளுநர் கிறிஸ் சுனுனு, முன்னாள் ஆர்கன்சாஸ் ஆளுநர் ஆசா ஹட்சின்சன் உள்ளிட்டவர்களும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+