உலகத்துக்கே பெரிய ஆபத்து வருது.. எல்லாரும் அழியப் போறாங்களா? "அது" இங்கே வருதாமே.. நாளை குறித்த நாசா
வாஷிங்டன்: நாசா வெளியிட்டுள்ள ஒரு தகவலானது, மொத்த பேரையும் வெலவெலக்க வைத்து வருகிறது.. இது தொடர்பான விமர்சனங்களும், கருத்துக்களும் இப்போதே சோஷியல் மீடியாவில் உலாவர துவங்கிவிட்டன.
விண்கல்கள் பூமியை தாக்க போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம்.. சூரிய குடும்பம் உருவான போது, கோளாக மட்டுமே உருவாகாமல் நின்றுபோன, சிறிய பாறைப்பொருட்கள்தான் விண்கல் என்று சொல்வார்கள்.

சூரிய குடும்பத்துக்கு வெளியே, இதுபோல பல விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை, அவற்றை பாதிக்கும் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன... பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து விடும். ஆனால், சில சமயம், பூமியை தாக்கும் வாய்ப்புகளாக அமைந்துவிடும். அந்தவகையில், இதுவரை 30 ஆயிரம் விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதாம்.
கடந்த மார்ச் மாதம் நாசா ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது, வரும் 2046 பிப்ரவரி 14ம் தேதி, 2023 டி.டபிள்யு என்ற விண்கல் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது.
கணித்த நாசா: இது மணிக்கு 24.64 கி.மீ. வேகத்தில் சுற்றுவதாகவும், தன்னுடைய சுற்றுப்பாதையை ஒரு முறை சுற்றி முடிக்க மொத்தம் 271 நாட்கள் ஆகின்றன என்றும், இந்த விண்கல், இந்திய பெருங்கடல் - பசிபிக் கடல், அமெரிக்காவின் மேற்கு - கிழக்கு கடற்கரை பகுதிகள் - லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் உள்ளிட்ட நகரம் ஏதாவது ஒன்றில் விழுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டிருந்தது.
இது புதிய விண்கல் என்பதால் அதன் சுற்றுப்பாதையை கணிக்க நீண்ட நாட்கள் தேவைப்படுவதாகவும், எதிர்காலத்தில் இது பூமியை தாக்கும் வாய்ப்பு இல்லாமலும் போகலாம் என்றும் விஞ்ஞானிகள் யூகமாக கூறியிருந்தனர்.
புதிய விண்கல்: இந்நிலையில், இன்னொரு தகவலை நாசா வெளியிட்டுள்ளது.. பூமியின் மீது புதிய விண்கல் ஒன்று மோதப்போகிறதாம்.. அது பயங்கரமான சேதங்களையும் விளைவிக்க போகிறதாம்.. இதற்காக சுமார் 7 வருடங்களாகவே, தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும்நிலையில், பூமி மீது மோதி சுமார் 22 அணுகுண்டுகளின் நாசத்தை விளைவிக்கப்போகும் விண்கல் ஒன்றை விண்வெளியில் எதிர்கொள்ள போவதாகவும் நாசா முடிவு செய்துள்ளது.
பூமியின் மீது விளைவிக்கப்போகும் நாசத்தை அளவிடுவதற்காகவும், அதனை விண்வெளியை அழிப்பதற்கான ஏற்பாடுகளுக்காகவும், அந்த விண்கல்லின் பரப்பிலிருந்து மாதிரியை சேகரிக்க அனுப்பப்பட்ட விண்கலம் விரைவில் பூமிக்கு திரும்ப உள்ளதாம்..
மெகா பிளான்: வரும் 2182ம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று பூமி மீது மோதவிருக்கும் "பென்னு" என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல்லுக்கு எதிரான நடவடிக்கைகளை இப்போது முதலே நாசா தொடங்கிவிட்டதாம். இந்த விண்கல்லை விண்வெளியில் வைத்தே அழிக்கவும், நாசா திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
இப்படித்தான், கடந்த 1998-ல் புரூஸ் வில்லிஸ் நடித்த "ஆர்மகெடான்" என்ற படம் ஹாலிவுட்டில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.. அதாவது, பூமி மீது விழுந்து பேரழிவை ஏற்படுத்தப்போகும் விண்கல் ஒன்றினை, விண்வெளியில் வைத்தே விஞ்ஞானிகள் குழுவினர் அழிக்க முற்படுவார்கள்.. இதுதான் அந்த படத்தின் கதை..
நிஜமும், நிழலும்: அந்த கற்பனை கதைதான், இப்போது நிஜமாக போகிறதோ? என்ற கருத்துக்கள் இணையத்தில் ஆக்கிரமித்து வருகின்றன. அந்தவகையில், பூமி மீது விழப்போகும் விண்கல் குறித்த விமர்சனங்கள் இப்போதே வலம் வர துவங்கிவிட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications