Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளை மாளிகையில் டின்னரை வெளுத்து கட்ட மதியம் முதலே வயிற்றை காய போட்ட ஆனந்த் மகிந்திரா ட்வீட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த இரவு விருந்திற்காக தான் மதியம் முதல் பட்டினி கிடந்ததாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சந்தன பெட்டியில் வெள்ளி விநாயகர் சிலையை ஜோ பைடனுக்கும் வைர கல்லை அவருடைய மனைவி ஜில் பைடனுக்கும் பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு அமெரிக்க அரசு சார்பில் விருந்துக்கு அழைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீடா அம்பானி, ஆனந்த் மகிந்திரா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இரவு உணவுக்கான மெனுவை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், கெஸ்ட் செஃப் நீனா கர்டிஸ் உள்ளிட்டோர் தயார் செய்திருந்தனர்.

இந்த மெனுவில் லெமன டில் யோகர்ட் சார், மில்லட் கேக்கள், காளான் போட்டு சமைக்கப்பட்ட ரெசிபிகள், பழங்கள் உள்ளிட்டவை பரிமாறப்பட்டது. இந்தியர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டதால் அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. ரிசாட்டோ, ரோஸ் மற்றும் ஏலக்காய் கலந்த டெசர்ட் உள்ளிட்டவை உணவில் இருந்தன.

இந்த விருந்தில் ஆனந்த் மகிந்திராவும் கலந்து கொண்டார். இவர் இதுகுறித்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அமெரிக்க வயலின் கலைஞர் ஜோஸ்சுவா பெல்லின் இசை நிகழ்ச்சி நடந்ததையும் அவர் வீடியோவாக ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார். வியாழக்கிழமை காலையே வாஷிங்டன் சென்ற மகிந்திரா இரவு விருந்தில் பரிமாறப்பட்ட மெனு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Anand Mahindra skipped lunch as he was called for dinner at White house

வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அழைக்கப்பட்டவுடன் நான் எனது மதிய உணவை சாப்பிடவில்லை. இரவு விருந்தை நன்கு சாப்பிட வேண்டும் என்பதற்காக பசியுடன் காத்திருந்தேன். எனது முயற்சிகளுக்கு நியாயமாக நடந்து கொண்டேன் (பட்டினி கிடந்ததற்கேற்ப நன்றாக சாப்பிட்டத்தைதான் அப்படி சொல்கிறார்) என ட்விட்டரில் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார்.

இந்த ட்வீட்டிற்கு பலர் வீட்டில் மதியம் பிரியாணி என்றால் காலை முதலே பட்டினி கிடப்பது போல் நீங்கள் இரவு உணவுக்காக மதியம் முதலே வயிற்றை காய போட்டீர்களா என நெட்டிசன்கள் காமெடியாக கேட்டு வருகிறார்கள். ஆனந்த் மகிந்திரா சமூகவலைதள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+