மனிதகுல வரலாற்றில் மகத்தான சாதனை.. நிலவின் மறுபக்கத்தை அடைந்த விண்வெளி வீரர்கள்! அசத்திய நாசா!
வாஷிங்டன்: ஆர்டெமிஸ் II மிஷன் மூலம், விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்கள், தற்போது நிலவின் மறு பக்கத்தை அடைந்திருக்கின்றனர். நிலவின் மறு பக்கத்திற்கு மனிதர்கள் செல்வது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்னர் நிலவில் மனிதர்கள் கால் வைத்திருந்தாலும், அது பூமியை நிலவு பார்த்திருந்த பக்கத்தில்தான் நடந்தது. ஆனால், இந்த முறை நிலவின் மறு பக்கத்தை விண்வெளி வீரர்கள் நேரில் கண்டுள்ளனர். இதன் மூலம், இந்த சாதனையை படைத்த மனிதர்கள் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்கள்.

நிலவும் பூமியும்
நிலவு எப்போதும் பூமியை பார்த்த மாதிரியே லாக் ஆகியிருக்கும். இந்த பகுதியில்தான் நாம் இதற்கு முன்னர் பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறோம். அந்த வகையில், நிலவின் மறு பக்கத்தை, மனிதர்கள் காணாத பக்கத்தை நேரில் காணவும், அங்கு சென்று தரை இறங்கவும் நாசா, ஆர்டெமிஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சம்
இந்த திட்டம் மொத்தம் 3 விதமாக செயல்படுத்தப்படும். முதல் திட்டத்தில் ஆள் இல்லாத விண்கலம் நிலவின் மறு பக்கத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வந்து சேர்ந்தது. இரண்டாவது திட்டத்தில் இதேபோல மனிதர்கள் சென்று, தரையிறங்காமல் வெறுமென வேடிக்கை பார்த்துவிட்டு வருவார்கள். இந்த திட்டம்தான் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் முக்கிய அம்சம் தற்போது வெற்றியடைந்திருக்கிறது.
நிலவின் ஈர்ப்பு விசை
அதாவது, விண்கலம் தற்போது நிலவின் ஈர்ப்பு விசை மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது. இனி விண்கலத்தின் மீது பூமியின் ஈர்ப்பு விசையை விட நிலவின் ஈர்ப்பு விசை அதிக ஆதிக்கம் செலுத்தும். இது விண்கலத்தை நிலவை நோக்கி இழுக்கத் தொடங்கும் முக்கியமான கட்டமாகும்.
மிஷன் வெற்றி
இந்த விண்கலம் நிலவில் தரை இறங்காமல், நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதை ஒருமுறை சுற்றி வரும். இதை 'ஃப்ரீ ரிட்டர்ன் டிராஜெக்டரி' என்பார்கள். நிலவின் ஈர்ப்பு விசை விண்கலத்தைத் தூக்கி எறிந்து மீண்டும் பூமியை நோக்கித் திருப்பும். விண்கலம் நிலவின் மறு பக்கத்திற்கு போகும்போது விண்கலம் பூமியுடனான தொடர்பை ஒரு குறிப்பிட்ட நேரம் இழக்கும். இதையெல்லாம் சமாளித்து வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வந்தால், மிஷன் வெற்றிப்பெற்றது என்று அர்த்தம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications