"80% வேலைகள் காலி.." ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைகள் பறிபோவதை தடுக்கவே முடியாது.. புது வார்னிங்
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் இப்போது வேற லெவலில் வளர்ந்து வரும் நிலையில், இது குறித்து டாப் வல்லுநர் ஒருவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகில் இப்போது எங்குத் திரும்பினாலும் செயற்கை நுண்ணறிவு குறித்தே பேச்சாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வந்தவுடன் ஒட்டுமொத்த ஏஐ துறையும் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது.

இந்த சாட் ஜிபிடி நாம் எந்த கேள்வி கேட்டாலும் அதற்குப் பதில் சொல்லும். கேள்விகளுக்கு மட்டுமில்லை.. கவிதை கேட்டால் கவிதை எழுதித் தரும்.. லவ் லெட்டர் கேட்டால் லவ் லெட்டர் கூட எழுதித் தரும். நாம் இதுவரை பார்த்த ஏஐ கருவிகளில் இது வலிமையான ஒன்றாக இருக்கிறது.
இந்த ஏஐ கருவிகளால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் இருக்கவே செய்கிறது. சில நேரங்களில் நமக்கு ஏற்படப் போகும் மோசமான நோய்களைக் கூட ஒரு வகையான ஏஐ கருவிகள் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஏஐ கருவிகளை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் கூட ஒரு தரப்பினர் இது குறித்துத் தொடர்ந்து எச்சரித்தே வருகிறார்கள்.
ஏஐ கருவிகள்: குறிப்பாக இந்த ஏஐ கருவிகளால் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்து வருகின்றனர். பல லட்சம் வேலைகள் வரும் காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தால் மாயமாகும் ஆபத்துகள் இருப்பதாகப் பலரும் தொடர்ச்சியாக எச்சரித்தே வருகின்றனர். இதனிடையே வரும் ஆண்டுகளில் மனிதர்கள் செய்யும் வேலைகளில் சுமார் 80 சதவீத வேலைகளைச் செய்யும் வகையில் ஏஐ கருவிகள் மாறும் என்று அமெரிக்க-பிரேசிலிய ஆய்வாளர் பென் கோர்ட்செல் எச்சரித்துள்ளார்,
56 வயதான கோர்ட்செல் செயற்கை நுண்ணறிவு துறை குறித்து ஆய்வு செய்ய SingularityNET என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். ரியோ டி ஜெனிரோவில் நடந்த உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கோர்ட்செல், மனித அறிவாற்றல் திறனைக் கொண்ட ரோபோக்களை இன்னும் சில ஆண்டுகளில் உருவாக்கிவிட முடியும் என்றார்.
மனிதப் பண்புகளைக் கொண்ட ரோபோக்கள்: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த ஏஐ கருவிகள் மனிதர்களைப் போலப் புத்திசாலியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அப்போது அது தனது பிரோகிராமிங்கை தாண்டி பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கும். நாம் அந்த இடத்தில் இருக்கிறோமா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இன்னும் சில ஆண்டுகளில் மனிதப் பண்புகளைக் கொண்ட அந்த ரோபோக்களை உருவாக்கிவிட முடியும் என நான் நம்புகிறேன்.
இவை ஆபத்தான ஏஐ கருவிகளாக மாறும் என நான் நினைக்கவில்லை. இவை மிகவும் சக்திவாய்ந்த கருவிகள் என்றாலும் கூட இவை மனிதனைப் போல சிந்தித்து முடிவெடுக்க இன்னும் பல காலம் இருக்கிறது. அதன் டிரைனிங் ஏரியாவுக்கு வெளியே இந்த ரோபோக்களால் எதையும் செய்ய முடியாது, எதையும் கண்டுபிடிக்கவும் முடியாது.
ஏஐ கருவிகள் தவறான தகவலைப் பரப்பலாம் என்பதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சிலர் சொல்வதைக் கேட்டால் வேடிக்கையாக உள்ளது. அப்படிப் பார்த்தால் இப்போது அதீத தவறான தகவல்களைப் பரப்பும் இணையத்தை நாம் தடை செய்துள்ளோமா.. அப்படி இருக்கும் போது ஏஐ கருவிகளை மட்டும் தடை செய்ய வேண்டும் என நாம் ஏன் சொல்ல வேண்டும். சுதந்திர சமூகத்தை நாம் அடைய எந்தவொரு விஷயத்தையும் தடை செய்யக் கூடாது.
வேலை போகும்: அதேநேரம் இந்த ஏஐ கருவிகள் வேலைவாய்ப்பு துறையில் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும். இப்போது நாம் செய்யும் 80 சதவீத வேலைகளே இல்லாமல் போகலாம். சாட் ஜிபிடி என்று இல்லை.. அடுத்தடுத்து வரும் பல்வேறு ஏஐ கருவிகள் பல வேலையிழப்பிற்குக் காரணமாக அமையலாம்.
இருப்பினும், இதை நான் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கவில்லை. இதை நன்மையாகவும் நாம் பார்க்கலாம். இப்போது இருக்கும் வேலைகளை விட்டு வாழ்க்கையை நடத்த பெட்டரான வேலைகளை மக்கள் தேர்வு செய்யலாம். எனவே, இது நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே செய்யும். இருப்பினும் அதை நாம் ஏற்றுக் கொள்ளவே சில காலம் ஆகும் என நான் நினைக்கிறேன்" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!












Click it and Unblock the Notifications