இந்தியாவுக்கு ஆபத்து? பூமியை தாக்கும் பிரம்மாண்ட சிறுகோள்.. நாசா கொடுத்த வார்னிங்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் 2024 YR4 என்ற சிறுகோள் இன்னும் ஏழு ஆண்டுகளில் பூமியைத் தாக்கும் ஆபத்து இருக்கிறதாம். அது பூமியை எந்த பகுதியில் தாக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த எச்சரிக்கை பட்டியலை நாசா வெளியிட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவும் இருப்பது கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

நமது பூமி சூரியனைச் சுற்றிவருவது அனைவருக்கும் தெரியும். அதேபோல இங்குப் பல லட்சம் சிறுகோள்களும் விண்வெளியில் சுற்றி வருகிறது. அதில் பெரும்பாலான சிறுகோள்களால் நமக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை.

Nasa space science

சிறுகோள்கள்

ஆனால், ஓரிரு சிறுகோள்கள் மட்டும் பூமியின் மீது விழும் ஆபத்து இருக்கவே செய்கிறது. இதை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தே வருகிறார்கள். பூமியைத் தாக்கும் ஆபத்து இருந்தால் அது குறித்து எச்சரிக்கையும் வழங்குவார்கள். அதுபோலத் தான் இப்போது 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சிறுகோள் 7 ஆண்டுகள் கழித்து அதாவது 2032ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பூமியைத் தாக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளனர். இது பூமியைத் தாக்காமல் பாதுகாப்பாகச் சென்றுவிட 97.9% வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் பூமியில் மோத 2.1% வாய்ப்பு இருக்கிறதாம். கிட்டதட்ட 98% பாதுகாப்பு இருக்கே என நீங்கள் கேட்கலாம். விண்வெளி விவகாரம் என வரும் போது எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் 2.1% கூட அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்.

2024 YR4 சிறுகோள்

இந்த 2024 YR4 சிறுகோளின் பாதை, வேகம் மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு ஆய்வாளர்கள் சில எச்சரிக்கைகளை வழங்கியுள்ளனர்.. இது ஒருவேளை தாக்கினால் பூமியின் பல்வேறு பகுதிகள் அழியும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவிலிருந்து தொடங்கி, பசிபிக் பெருங்கடல், தெற்காசியா, அரேபியக் கடல் மற்றும் ஆப்பிரிக்கா வரையிலான காரிடாரில் எங்கு வேண்டுமானாலும் தாக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

இந்தியாவுக்கு ஆபத்து?

மேலும் வெனிசுலா, கொலம்பியா, ஈக்வடார், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எத்தியோப்பியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளையும் சிறுகோள் தாக்கி அழிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறுகோள் தாக்கும்போது பூமியின் சுழற்சி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அது எங்கு விழும் என்பது தெரிய வரும். இதற்கிடையில், உலகின் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி டெலஸ்கோப் உதவியுடன் அந்த சிறுகோள் குறித்துக் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க ஆய்வுகளும் நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த 1908ஆம் ஆண்டில், கிட்டதட்ட இதே சைஸ் கொண்ட துங்குஸ்கா என்ற சிறுகோள் சைபீரியாவை தாக்கியது. அதில் 830 சதுர கிலோமீட்டர் காடுகள் மொத்தமாக அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

ஆய்வாளர்கள் தீவிரம்

இந்த சிறுகோள் ஆஸ்டிராய்டு டெரெஸ்ட்ரியல்- இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் ஸ்டேஷன் மூலம் டிசம்பர் 2024ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே இதற்கு 2024 YR4 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியைத் தாக்க 1.3% வாய்ப்பு இருந்த போதிலும், நாசா அதை மிகவும் ஆபத்தான பொருளாகப் பட்டியலிட்டுள்ளது. அதன் சுற்று வட்டப் பாதையைக் கண்டறியும் முயற்சியில் இப்போது ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+