Asteroid Strike: நிலவில் மோதும் பிரம்மாண்ட விண்கல்.. பூமியை நோக்கி வரும் பேராபத்து! விஞ்ஞானிகள் பகீர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: Asteroid Strike: நிலவு மீது விண்கல் ஒன்று மோத வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வெடித்து சிதறும் துகள்களால் பூமிக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் செயற்கை கோள்களுக்கும் அபாயம் உள்ளதாம். 60 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கற்பனைக்கும் எட்டாத பல பேரதிசயங்களை கொண்டதுதான் இந்த பிரபஞ்சம். நாம் வாழும் பூமியாக இருக்கட்டும், அதன் துணைக்கோளான சந்திரனாக இருக்கட்டும். பிற கோள்களாக இருக்கட்டும். இவை அனைத்துமே எப்படி தோன்றியது?...

Asteroid Strike

விண்வெளி ஆராய்ச்சி

பூமியை போல மனிதர்கள் வாழக்கூடிய பிற கோள்கள் உள்ளனவா? என விடை தெரியாத பல மர்மங்களும் கேள்விகளும் நீடிக்கின்றன. இவற்றிற்கு விடை காண விண்வெளி ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் ஒரு சதவீதம் கூட இன்னும் இதற்கான விடை கிடைக்கவில்லை என்பதே விஞ்ஞானிகளின் கூற்றாக உள்ளது.

சூரிய மண்டலத்தில் பூமியை போல, பல கோள்கள் இருப்பது தெரியும். இது தவிர பூமியை சுற்றிலும் பூமி சுற்றி வரும் பாதையிலும் மில்லியன் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இப்படி சுற்றி வரும் விண்கற்கள் சில நேரங்களில் புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியை தாக்க வரும். இதில் பெரும்பாலான விண்கற்கல் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடுகின்றன.

நிலவு மீது மோதும் விண்கல்

அரிதாக சில விண்கற்கள் மட்டுமே பூமியை தாக்கியிருக்கின்றன. பூமியை மிரட்டும் வகையில் அவ்வப்போது விண்கற்கள் எப்படி மோத வருகிறதோ அதேபோல, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள்ளும் சில விண்கற்கள் நுழைந்து தாக்குகின்றன. அப்படியான ஒரு நிகழ்வுதான் வரும் 2032 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Asteroid Strike

இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில், "விண்கல் 2024 YR4 புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. 60 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் டிச. 22, 2032 ஆம் ஆண்டு நிலவு மீது மோத வாய்ப்பு உள்ளது. தற்போது 4 சதவீத வாய்ப்பு உள்ளது. இந்த விண்கல் நிலவு மீது மோதும் பட்சத்தில் அதன் துகள்கள் பூமியை நோக்கி வரும்.

சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும்

இதனால் செயற்கை கோள்களுக்கும் அபாயம் உள்ளது. இதற்கான வாய்ப்பு குறைவே என்றாலும் இந்த விண்கல்லின் தாக்கம் என்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும்" என்றனர். சீனாவில் உள்ள சிங்குவா பல்கலகைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வு இதழில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நிலவு மீது விண்கல் மோதும் பட்சத்தில் வெளிப்படும் சக்தியானது, ஒரு மீடியம் அளவிலான வெப்ப அணுகுண்டு வெடிப்புக்கு நிகரானதாக இருக்கும். சமீப காலத்தில் சந்திரனில் பதிவாகும் மிகப்பெரிய மோதலாக இதுவாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ரிக்டர் அளவிற்கு குலுங்கும்

மேலும், நிலவில் சுமார் ஒரு கிலோமீட்டர் அகலத்திற்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்படுவதோடு நிலவே சுமார் 5 ரிக்டர் அளவிற்கு குலுங்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த மோதலின் விளைவாக விண்வெளியில் மிகப்பெரிய குப்பை ஏற்படும். இதில் சில பொருட்கள் பூமியை நோக்கி விழக்கூடும்.

நேரடியாக பார்க்க முடியும்

இதன் காரணமாக கண்களால் நேரடியாகப் பார்க்கக்கூடிய அளவுக்கு தீவிரமான விண்கல் மழை உருவாகும். குறிப்பாக தென் அமெரிக்கா, வட ஆப்ரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பப் பகுதிகளில் அது தெளிவாகத் தெரியும். ஒரு மணி நேரத்தில் கோடிக்கணக்கான விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இது பூமிக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால், விண்கல்லின் பாதையை மாற்றுவதற்கான பணியை தொடங்கலாமா என்பது குறித்து விண்வெளி நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+