வைர மோதிரம் இருக்கலாம்.. பிஸ்கட்டை பார்த்து சாப்பிடுங்க.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பேக்கரி ஓனர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிஸ்கட் தயாரிக்கும் போது ரூபாய் 3.30 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் தொலைந்து போனதாம். எனவே பிஸ்கட்டுக்குள் வைர மோதிரம் இருக்கலாம் என்றும், எனவே, பிஸ்கட்டை சாப்பிடுபவர்கள் கவனமாக சாப்பிடுங்கள் என்றும் வாடிக்கையாளரை பேக்கரி ஓனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
எங்கள் பிஸ்கட்களை வாங்கினால் பரிசு தருகிறோம் என்று சில நேரங்களில் வியாபார போட்டியில் கடைகள் விளம்பரப்படுத்துவதை பார்த்து இருக்கிறோம். ஆனால், எங்கள் தயாரிப்பு பிஸ்கட்களை பார்த்து சாப்பிடுங்கள் என்றும், அதில் மதிப்பு மிக்க வைரக் கல் ஒன்று மறைந்து இருப்பதாகவும் பேக்கரி ஒன்று வினோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பிஸ்கட் விற்பனை: அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மோன்ரோ. அங்குள்ள நகரம் ஒன்றில் பேக்கரி ஷாப் வைத்து இருக்கிறார். இவரது பேக்கரியில் இருந்து குக்கிஸ்கள், பிஸ்கட்கள், கேக் உள்ளிட்டவை மொத்தமாக தயாரிக்கப்பட்டு சுற்று வட்டாரத்தில் உள்ள சிறு கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இவரது கடை பிஸ்கட்கள் தனி ருசியில் இருக்கும் என்பதால், பலரும் ஆர்வமாக இவரது பேக்கரியில் இருந்து வாங்கி செல்கின்றனர். இதனால், விற்பனை சக்கை போடு போட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கம் போல பேக்கரியில் பிஸ்கட்களை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.
தொலைந்து போன வைர மோதிரம்: அப்போது அவர், சுமார் 4,000 டாலர் ( இந்திய மதிப்பில் 3.30 லட்சம்) மதிப்புள்ள வைர மோதிரத்தை தனது விரலில் அணிந்துள்ளார். மோன்ரேவின் நிச்சயதார்த்தின் போது அணிவிக்கப்பட்டதால் தனது கையில் இருந்து ஒருநாளும் கழற்றாமல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அணிந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த வாரம் 5 ஆம் தேதி தனது பேக்கரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது கையில் இருந்த மோதிரத்தின் வைர கல் மிஸ் ஆகியுள்ளது. இதனால், அதிர்ச்சியான மோரேன் தனது கணவரிடம் மோதிரத்தின் வைர கல் தொலைந்து போனதை சொல்லி அழுது இருக்கிறார். எப்படியும் பேக்கரியில் தான் கிடக்கும் என்று அங்கு முழுவதும்தேடி பார்த்துள்ளனர்.
பிஸ்கட் தயாரிக்கும் குடுவைக்குள்: ஆனால் கடைசி வரை கிடைக்கவில்லை. அப்போதுதான் மோனரேவிற்கு பேக்கரியில் பிஸ்கட் தயாரிக்க தேவையான பொருட்களை பிஸ்கட் தயாரிக்கும் பெரிய குடுவைக்குள் போட்டது நியாபகம் வந்துள்ளது. இதனால் அங்கு பிஸ்கட் தயாரிக்கும் குடுவைக்குள் மோதிரக் கல் விழுந்து இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.
இதையடுத்து, தனது பேஸ்புக்கில் பிஸ்கட் செய்யும் போது வைர மோதிரம் காணாமல் போனது பற்றிய விவரங்களை போட்டுள்ளர். அதில், எனது கடையில் இருந்து பிஸ்கட் வாங்கினால் இன்று உங்களுக்கு போனஸ்தான். எனது வைரம் தொலைந்து விட்டது. எனது இதயம் உடைந்துவிட்டது. 40 வருடங்களாக இந்த மோதிரத்தை அணிந்து வைத்திருகிறேன்.
உஷார் படுத்திய ஓனர்: எனவே இந்த மோதிரத்தை கண்டறிந்து கொடுத்தால் நான் என்றென்றும் நன்றிக்கடனாக இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், தன்னிடம் பிஸ்கட் வாங்கி சென்ற அனைத்து கடைக்காரர்களிடமும் வாடிக்கையாளர்களை உஷார்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பி தருமாறு கோரிக்கை: தனது வாடிக்கையாளர்கள் யாரும் பிஸ்கட்டை கடித்து பற்களை உடைத்துக் கொள்ளக் கூடாது என்று கடைக்காரர்களை உஷார்படுத்தியிருப்பதாகவும் மோதிரம் கிடைத்தால் திருப்பி தருமாறு கோரிக்கை வைத்து இருப்பதாகவும் சொல்கிறார். பிஸ்கட்டிற்குள் மோதிரத்தின் வைர கல் கிடக்கும் தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பிஸ்கட்டையும் தேடி தேடி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்களம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications