மக்களே கவனம்.. வாட்ஸ் அப்பில் சம்பந்தமே இல்லாமல் வரும் வெளிநாட்டு கால்ஸ்.. சிக்காமல் இருப்பது எப்படி
வாஷிங்டன்: வாட்ஸ் அப்பில் கடந்த சில தினங்களாக பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் பெரும்பாலும் மிஸ்டு கால்களாக வருவதாக பயனர்கள் பலரும் கூறி வருவதை காண முடிகிறது. இது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட் போன்களையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மக்கள் மத்த்தியில் வாட்ஸ் அப் பயன்பாடு அதிகமாக உள்ளது. உலக அளவில் 2 பில்லியனுக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர்.

குறுஞ்செய்தி பரிமாற்றம் தொடங்கி முக்கிய கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடிவதால் தற்போது வாட்ஸ் அப் பயன்பாடு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் குருப் கிரியேட் செய்து தங்கள் நட்பு வட்டங்களுக்குள் அரட்டை அடிப்பதில் தொடங்கி அலுவலக பயன்பாடு வரைக்கும் வாட்ஸ் அப் முக்கிய பங்கு வகிக்கிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். வாட்ஸ் அப் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிக அளவில் உள்ள நிலையில், வாட்ஸ் அப் மூலமாகவும் சமீப காலமாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
வாட்ஸ் அப்பிற்கு சில லிங்குகளை அனுப்புவது..அதை கிளிக் செய்யும் அப்பாவி மக்களிடம் இருந்து தகவல்களை திருடி அதன் மூலமாக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், முன் பின் தெரியாத எண்களில் இருந்து வரும் எந்த ஒரு சந்தேக மெசேஜ்களையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து திடீர் திடீரென அழைப்புகள் வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. குறிப்பாக எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிடம் இருந்தும் இதுபோன்ற பலருக்கும் வந்துள்ளது. சில வினாடிகள் மட்டுமே வந்து விட்டு தானாகவே கட் ஆகிவிடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது.

வாட்ஸ் அப்பிற்கு வரும் இந்த சர்வதேச கால்கள் அந்த நாட்டில் இருந்துதான் வருகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது.ஏனெனில் இந்த இணையதள அழைப்புகள் மூலமாக வருவதால் அந்த நாட்டில் இருந்து வருகிறது என்று நினைக்கக் கூடாது. இந்த எண்கள் மோசடியாளர்கள் எங்காவது ஒரு இடத்தில் இருந்து கொண்டு மொத்தமாகவும் இயக்ககூடியதாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதுபோன்ற அழைப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் கேட்கிறீர்களா? இதற்கு சிம்பிளான ஒரே விஷயம்தான் உள்ளது. இந்த அழைப்புகளை பற்றி அப்படியே புறக்கணித்து விட வேண்டும். மிஸ்டு கால் வருவதால் மீண்டும் கால் செய்ய நினைக்கூடாது. பயனர்கள் இந்த எண்களை பிளாக் செய்வதோடு, ரிபோர்ட் செய்து விடலாம். இப்படி வரும் அழைப்புகளுக்கு நாம் பதிலளித்தால் நமது தகவல்கள் திருடப்படலாம் எனவும் இதன் மூலம் பல வகையான மோசடிகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
-
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications