"ஹெச் 1பி" விசாவுக்கு தடை விதித்தால்.. இந்தியர்களுக்கு வேற என்ன விசா இருக்கு! யாருக்கு யூஸ் ஆகும்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் ஹெச் 1பி விசாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனத் தகவல் வெளியாகி வருகிறது. அமெரிக்காவுக்குச் செல்ல ஹெச் 1பி விசாக்கள் மட்டுமின்றி ஏகப்பட்ட விசாக்கள் உள்ளன. அவை என்ன விசாக்கள்.. யாரெல்லாம் அந்த விசாக்களை பெறலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வருவதாலேயே அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை எனத் தொடர்ந்து கூறி வரும் டிரம்ப், அதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசித்து வருகிறார்.

Donald Trump America India

விசாக்கள்

அவர் ஹெச் 1பி விசாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனத் தெரிகிறது. இந்தியர்களே இந்த ஹெச் 1 பி விசாக்களை அதிகம் பயன்படுத்தும் நிலையில், இது பெரிய சிக்கலை இந்தியர்களுக்குத் தரலாம். ஆனால், ஹெச் 1பி விசாவை தவிர்த்து மேலும் பல விசாக்கள் வெளிநாட்டினருக்கு இருக்கிறது. அவை என்னென்ன விசா.. யாருக்கெல்லாம் பயன்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவில் H-2A, H-2B, H-3, L, O, P, Q மற்றும் R எனப் பல வகை விசாக்கள் உள்ளன. இந்த விசாக்கள் அமெரிக்காவில் பணிபுரிய மிகப் பெரியளவில் உதவும். ஊழியராகவும் உரிமையாளர்களாகவும் இந்த விசாக்களை பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் செல்லலாம்.

மாற்று விசா எவை

அமெரிக்காவில் விவசாயத் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் போது, வெளிநாட்டில் இருந்து தற்காலிகமாக விவசாயத் தொழிலாளர்களை பணியில் அமர்த்த இந்த ஹெச்-2ஏ விசா உதவும். இதேபோல ஹெச்-2பி என்ற ஒரு விசா இருக்கிறது. அதில் ஹாஸ்பிடாலிடி, கட்டுமானம் உள்ளிட்ட பிற சீசனல் வேலைகளுக்குத் தேவையான பணியாளர்களை நிரப்பிக்கொள்ளலாம். இந்த இரு விசாக்களில் வெளிநாட்டினர் பணியில் அமர்த்தும் போது, அதனால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதைச் சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனம் நிரூபிக்க வேண்டும்.

அடுத்து ஹெச்-3 விசா.. வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டில் இல்லாத சிறப்புப் பயிற்சியை அமெரிக்காவில் பெற இது அனுமதிக்கிறது. மருத்துவப் பயிற்சியைத் தவிர்த்து, பிற துறைகளில் இதில் சிறப்புப் பயிற்சியைப் பெறலாம். அதேநேரம் வழக்கமான தொழிலாளர்களைப் போல வேலை செய்ய முடியாது.

எல் 1 விசா

அதேபோல எல்1 விசாவும் தனியாக இருக்கிறது. இது H-1Bக்கு சிறந்த மாற்றாக அமைகிறது. நிர்வாகிகள், மேலாளர்கள் உள்ளிட்ட பதவியில் வெளிநாட்டில் வேலை செய்வோரை கார்பரேட் நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பணியிட மாற்றம் செய்யும் போது இது உதவும். குறைந்தபட்சம் ஒரு ஆண்டு குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை செய்திருந்தால் அவரை எல்1 விசா மூலம் அமெரிக்காவுக்கு பணியிட மாற்றம் செய்யலாம். இதற்கு ஹெச் 1 பி விசாவை போல அதிகபட்ச கட்டுப்பாடு எதுவும் இல்லை. எனவே, தகுதி வாய்ந்தவர்களுக்கு இந்த எல்1 பி விசா எளிதாகக் கிடைக்கும்.

அறிவியல், கல்வி, வணிகம், கலை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் அசாதாரண திறன் கொண்ட நபர்களுக்கு ஓ-1 விசா வழங்கப்படுகிறது. ஹெச் 1 பி விசாவை போல இதில் லாட்டரி முறை இல்லை. திறமையின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது.

ஆர் மற்றும் பி 1 விசா

அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வேலை செய்வோர் பி1 விசாவை பயன்படுத்தலாம். சர்வதேச கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் மூலம் அமெரிக்கா செல்வோர் Q1 விசாவை பயன்படுத்தலாம். கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களுக்கு இந்த விசா உதவும். R-1 விசா என்பது மத அமைப்பில் மத குருமார்கள் உட்பட மத அமைப்புகளில் வேலை செய்வோருக்கு வழங்கப்படும். குறைந்தது இரு ஆண்டுகள் குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் நபர்களுக்கு இந்த விசா கிடைக்கும்.

குடும்பத்தினருக்கான விசா

இது தவிர முதன்மை விசா வைத்திருப்போர் தங்கள் குடும்பத்தினரை அமெரிக்காவுக்கு அழைத்து வரவும் தனித்தனியாக விசாக்கள் உள்ளன. ஹெச் 1 பி விசா வைத்திருப்போர் குடும்ப உறுப்பினர்களை ஹெச் 4 விசா மூலமாக அழைத்து வரலாம். ஹெச் 4 விசா வைத்திருப்போர் அமெரிக்காவில் வேலையும் செய்யலாம். இது தவிர எல் 1 விசா வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு எல் 1 விசா, ஆர் 1 விசா வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு ஆர் 2 ஆகிய விசாக்கள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+