எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி பார்த்த பில்கேட்ஸ்...ஆனந்த் மகிந்திரா கொடுத்த அல்டிமேட் கமெண்ட்
எலக்ட்ரானிக் ஆட்டோ ரிக்ஷாவான ட்ரியோ-வை ஓட்டி மகிழ்ந்த பில்கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பக்கத்திலும் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
வாஷிங்டன்: மகிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரானிக் ஆட்டோ ரிக்ஷாவான ட்ரியோ -வை ஓட்டி மகிழ்ந்த பில்கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பக்கத்திலும் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா அல்டிமேட் கமெண்ட்டை பதிவிட்டுள்ளார்.
உலக பெரும் பணக்காரரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படு பிசியாக இருக்கும் பில்கேட்ஸ் , மும்பையில் ஆட்டோ ரிக்ஷா ஒன்றையும் ஓட்டி மகிழ்ந்தார்.

ஆட்டோ ரிக்ஷா
மகிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரானிக் ஆட்டோ ரிக்ஷாவான ட்ரியோ -வை ஓட்டி மகிழ்ந்த பில்கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பக்கத்திலும் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பின்னணியில் இந்தி பாடல் ஒன்றும் ஒலிபரப்பப்படுகிறது. வீடியோவின் முதலில் கண்ணாடியில் தனது முகத்தை காட்டி விட்டு ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டத்தொடங்கும் பில்கேட்ஸ் சாலைகளில் ஜாலியாக ஓட்டிச்செல்கிறார்.

கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும்..
இந்த வீடியோவிற்கு இடையே கேப்ஷனாக வெளியிடப்பட்டு இருக்கும் பதிவில், "மூன்று சக்கரங்கள் கொண்ட இந்த வாகனத்தில் என்ன இருக்கிறது... ஜீரோ எமிஷன்ஸ், எந்த இரைச்சலும் இல்லை.." என்ற வாசகங்கள் வீடியோவிற்கு இடையே ஓடுகின்றன. அதுபோக பில்கேட்ஸ் மேலும் தனது இன்ஸ்டாகிராமில் கூறுகையில், "விவசாயம் முதல் போக்குவரத்து வரை கார்பன் வெளியேற்றத்தை ஜீரோவாக குறைக்கும் வகையில் மீண்டும் ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளர்.

எலக்ட்ரிக் ரிக்ஷா வாகனத்தை ஓட்டினேன்
பில்கேட்ஸ் கோட் சூட் அணிந்தபடி இந்த ஆட்டோவை ஓட்டிச்செல்கிறார். நெட்டிசன்கள் மத்தியில் இந்த இன்ஸ்டா பதிவு வேகமாக பரவி வருகிறது. வாகனத்தை ஓட்டியது பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து இருக்கும் பில்கேட்ஸ், இந்தியாவின் புதுமைக்கான ஆர்வம் நம்மை ஒருபோதும் ஆச்சர்யபடுத்தாமல் இருக்காது. நான் எலக்ட்ரிக் ரிக்ஷா வாகனத்தை ஓட்டினேன். 131 கி.மீட்டர் தூரம் வரை ஒடும் திறன் கொண்டது. 4 பேர் இதில் பயணிக்க முடியும். மகிந்திரா போன்ற நிறுவனம் போக்குவரத்து துறையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையில் பங்களிப்பது ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது" என்றும் பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சி அளிக்கிறது
பில்கேட்சின் இந்த பதிவை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திராவும் தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார். ஆனந்த் மகிந்திரா கூறுகையில், "டிரியோ ஓட்டி பார்க்க நீங்கள் நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் அடுத்த பயணத்தின் போது உங்களுடன் (பில்கேட்ஸ்) டெண்டுல்கருடன் இணைந்து நானும் 3 வீலர் ரேசில் கலந்து கொள்ள விரும்புகிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications