உலக பணக்காரர் பட்டியல்.. பில்கேட்சுக்கு அடுத்து 5ம் இடம் பிடித்த உதவியாளர்! யார் இவர்-என்ன செய்தார்?

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 4வது இடத்தில் உள்ள நிலையில் அவரது முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பால்மர் 5வது இடத்துக்கு முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்தியா உள்பட பல நாடுகளில் முன்னணி தொழிலதிபர்கள் உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் தங்களின் தொழில், நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வருகின்றனர். அதோடு புதிய தொழில்களில் முதலீடும் செய்து வருகின்றனர்.
இந்த முதலீடுகள் லாபத்தை தரும்பட்சத்தில் அவர்களின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயரும். நஷ்டம் அடைந்தால் அவர்களின் சொத்து மதிப்பு என்பது குறையும். இதற்கிடையே தான் ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்களை பல அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது ப்ளூம்பெர்க் பில்லியனர் தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலக பணக்காரர்களின் வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 4வது இடத்தில் உள்ள நிலையில் அவரிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டீவ் பால்மர் 5வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த பட்டியலில் முதலிடத்தில் ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க் 193 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் LVMH Moet Hennessy - Louis Vuitton தலைவரும், சிஇஓவுமான பெர்னார்ட் அர்னால்ட் 156 பில்லியன் அமெரிக்க டாலருடன் 2வது இடத்திலும், அமேசான் நிறுவனரும், சிஇஓவுமான ஜெஃப் பெசோஸ் 156 பில்லியன் அமெரிக்க டாலருடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 122 பில்லியன் அமெரிக்கா டாலருடன் 4வது இடத்தில் உள்ளார். இதற்கு அடுத்தப்படியாக தான் பில்கேட்ஸிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டீவ் பால்மர் 5வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு என்பது 117 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதுதான் தற்போது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் இருப்பவர்கள் அனைவரும் சொந்தமான நிறுவனங்களை வைத்துள்ளனர். ஆனால் ஸ்டீவ் பால்மர் தனக்கென எந்த நிறுவனத்தையும் வைத்து கொள்ளாத நிலையில் 5வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.
மேலும் ஸ்டீவ் பால்மர் தனக்கு முதலாளியாக இருந்த பில்கேட்ஸை விட உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒரு இடம் மட்டுமே பின்தங்கி உள்ளார். அதோடு அவர் Oraccle சாப்ட்வேர் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி எலிசன், வாரன் பஃபெட், மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்டவர்களை விட முந்திய உள்ளார். அதாவது ஸ்டீவ் பால்மரை ஒப்பிடும்போது லாரி எலிசன் 114 பில்லியன் அமெரிக்க டாலருடன் 6வது இடத்திலும், வாரன் பஃபெட் 113 பில்லியன் அமெரிக்கா டாலருடன் 7 வது இடத்திலும், பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் 110 பில்லியன் அமெரிக்கா டாலருடன் 8 வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் ஸ்டீவ் பால்மர் எப்படி உலக பணக்காரர்களின் வரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறினார் என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது. அதாவது ஸ்டீவ் பால்மர் 1980 ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முக்கிய நபராக அறியப்பட்டார். அந்த நிறுவனத்தில் முக்கிய 30 நபர்களில் இவரும் ஒருவரானார். விண்டோஸ், எம்எஸ் ஆபிஸ் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளில் இவர் முக்கிய பங்காற்றினார்.
2000ல் அவர் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட தொடங்கினார். அவரது தலைமையின் கீழ், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பு உள்ளிட்ட முக்கிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தது. அவரது பதவிக்காலத்தில் மைக்ரோசாப்ட் புதிய உச்சம் தொட்டம். மேலும் கேமிங் துறையில் நுழைவதற்கான அடித்தளத்தையும் அவர் செய்தார். இதற்காக எக்ஸ்பாக்ஸ் கேமிங் கண்சோல் அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு 2014ல் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து அவர் வெளியேறினார். இதையடுத்து தான் சத்யா நாதெல்லா அந்த பதவிக்கு சென்றார். தற்போத அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் நிறுவனத்தை சொந்தமாக வைத்தார். இதில் முதலீடு குறித்த விபரங்களை அவர் கூறி வருகிறார். கடந்த ஆண்டில் ஸ்டீவ் பால்மரின் முதலீடுகள் மீதான லாபம் என்பது கிடுகிடுவென அதிகரித்தது. ஆண்டின் தொடக்கத்தில் அவர் 30 பில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டாலர்களை பெற்றார். இது அவரை உலக பணக்காரர்களின் பட்டியலில் முன்னேற்றமடைய செய்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications