பக்கத்து நகரத்திற்கு போக வந்த பயணி..வெளிநாட்டுக்கு கொண்டு சென்ற விமானம்..அமெரிக்காவில் வினோத சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அருகில் உள்ள நகரத்திற்கு செல்ல வந்த உள்நாட்டு பயணியை கவனக்குறைவால் வெளிநாட்டுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அழைத்து சென்ற வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
அண்மைக்காலமாக விமானங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நடந்து வருகின்றன. விமானத்தில் குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்து இருந்தது.
அதேபோல், விமானத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபடுவதும் நடுவானில் விமான சிப்பந்திகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கையிலும் ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.

அண்மையில், கூட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பயணி ஒருவரை தேள் கடித்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இப்படி தொடர்ச்சியான விமானங்களில் சில வினோத சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது புதிதாக சம்பவம் சேர்ந்துள்ளது.
அதாவது அமெரிக்காவின் உள்நாட்டு பயணி ஒருவரை தவறுதலாக வெளிநாட்டுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அழைத்து சென்றுள்ளது. இத்தனைக்கும் அந்த பயணியிடம் பாஸ்போர்ட் வேறு இல்லையாம்.. பேருந்தில்தான் போர்டு பார்க்காமல் வேறு ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏறி நடுவழியில் நடத்துனரிடம் திட்டு வாங்கி இறங்கி போகும் சில நிகழ்வுகளை கேள்வி பட்டு இருக்கிறோம்..
ஆனால், போர்டிங் பாஸ் என பலகட்ட செக்கிங்க்கிற்கு பிறகு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் நிலையில், இந்த தவறு எப்படி நடைபெற்றது என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம். அமெரிக்கவின் நியூ ஜெர்சியை சேர்ந்த பெண் எல்லிஸ் ஹெப்ராட். இவர் பென்னிசில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலாடேல்பியாவில் இருந்து புளோரிடாவில் உள்ல ஜாக்சன்வில்லே நகருக்கு அடிக்கடி பயணம் செய்து வருவது வழக்கமாம்.
அதேபோல், தான் சம்பவத்தன்றும் அவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மூலமாக ஜாக்சன்வில்லே நகருக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்து இருக்கிறார். ஆனால், அவர் வழக்கமாக அவர் செல்லும் நுழைவுப்பகுதி அன்று மாற்றப்பட்டுள்ளது. முதுகு ஆப்ரஷேனும் செய்து இருக்கும் எல்லிஸ் ஹெப்ராட் கடைசி நேரத்தில் வந்ததால், அங்கு நின்றிருந்த விமானத்தில் பயணிகள் கிட்டத்தட்ட ஏறி முடிந்து கிளம்புவதற்கான நடைமுறைகளை செய்ய தயராகியுள்ளது.

இதனால், அவசர அவசரமாக பெயரையும் மட்டும் செக் செய்து அங்கு இருந்த ஊழியரும் எல்லிஸ் ஹெப்ராட் செல்வதற்கு அனுமதி கொடுத்து இருக்கிறார். எல்லிஸ் ஹெப்ராடும் வழக்கமாக பயணிக்கும் பகுதி என்பதால் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் சென்றுள்ளார். ஆனால், விமானத்தில் ஏறிய பிறகுதான் ஜமைக்கா செல்லும் சர்வதேச விமானத்தில் ஏறியிருப்பது தெரியவந்து இருக்கிறது. இத்தனைக்கும் அவரிடம் அன்று பாஸ்போர்ட் வேறு இல்லையாம்.
இதனால், ஜமைக்காவிலும் இறங்க முடியாது என்பதால் விமானத்திலேயே அவர் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார். பல மணி நேரங்கள் கழித்து அதே விமானத்தில் மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட அசவுகர்யத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த பயணிக்கு இழப்பீட்டுடன் கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் விமான நிலைய ஊழியரிடம் இது குறித்து பேசப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications