அகமதாபாத் விமான விபத்து! விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.. வழிக்கு வந்தது போயிங்
வாஷிங்டன்: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' கூறியிருக்கிறது.
சமீப காலமாக போயிங் தயாரிப்பு விமானங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், இந்த விசாரணை சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி, மதிய நேரத்தில் போயிங் நிறுவனத்தின் 'ட்ரீம்லைனர் 787-8' ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. ஏர் இந்தியா இந்த விமானத்தை இயக்கிறது. விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட வெறும் 32 விநாடிகளில் விபத்தில் சிக்கியது. விபத்தில் விமான பயணிகள், பணியாளர்கள், விமானிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பெரும் சோகத்தையும், விமான பயணம் குறித்த கேள்விகளையும் எழுப்பியிருந்தது.
இந்த விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) விசாரணையை தொடங்கியிருந்தது. தற்போது முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏர் இந்தியா விமானம் 171-ல் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும், அகமதாபாத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்போம்" என்று தெரிவித்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் நெறிமுறையான Annex 13-ன் படி, ஏர் இந்தியா AI171 பற்றிய தகவல்களை வழங்க AAIB-க்கு உரிமை உண்டு என்றும் போயிங் கூறியுள்ளது.
போயிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகரனிடம் பேசி, எங்கள் முழு ஆதரவை அளித்தேன். இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உதவ போயிங் குழு தயாராக உள்ளது" என்று கூறியுள்ளார்.
அதேபோல விசாரணை அறிக்கையை பெற்றுக்கொண்ட ஏர் இந்தியா நிறுவனம், "ஒழுங்குமுறை ஆணையத்துடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுத்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, விமானம் புறப்பட்டவுடன் ராம் ஏர் டர்பைன் (RAT) பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானத்தில் மின்சாரம் மற்றும் எரிபொருள் முழுவதுமாக தடைபட்டது தெரிய வந்துள்ளது. விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரை கடப்பதற்கு முன்பே உயரத்தை இழக்க ஆரம்பித்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நடுவானில் அணைக்கப்பட்ட இரண்டு என்ஜின்களின் எரிபொருள் சுவிட்சுகளும் மீண்டும் இயக்கப்பட்டதாகவும், இதில் என்ஜின் 1 செயல்பட தொடங்கிய நிலையில், என்ஜின் 2 செயல்படவில்லை என்றும் கருப்புப் பெட்டி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே போயிங் நிறுவனத்தின் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து மாத இடைவெளியில் போயிங் 737 MAX ரக விமானங்கள் இரண்டு விபத்துக்களில் சிக்கியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
போயிங் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர்கள் சாம் சலேபோர் மற்றும் ஜான் பார்னெட் போன்றவர்கள் நிறுவனத்தின் உற்பத்தித் தரம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இப்படி இருக்கையில், விமான விபத்து குறித்து ஒத்துழைப்பு தருவதாக போயிங்க கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications