"லீவ்" கேட்டது குத்தமா.. மூல நோய்க்கு ஊழியரிடம் ஆதாரம் கேட்ட மேனேஜர்! "அந்த" போட்டோ வந்ததால் பகீர்
வாஷிங்டன்: தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் மூல நோய் இருப்பதால் லீவ் கேட்டுள்ளார். அதற்கு அந்த மேனேஜர் ஆதாரம் கேட்ட நிலையில், அந்த நபர் தனது பின்புறத்தை போட்டோவாக எடுத்து அனுப்பி இருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்த அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களை நாம் புரட்டினால் அதில் நாம் கனவிலும் யோசிக்காத பல சம்பவங்களை நாம் பார்க்கலாம். இப்படி கூட நாம் நடக்குமா என யோசிக்காத பல சம்பவங்கள் இருக்கும்.

இங்கு அப்படி தான் விடுப்பு கேட்ட ஊழியர் ஒரு காரியம் செய்துள்ளார். இதில் அவர் மீது தப்பா இல்லை.. அவரது மேனேஜர் மீது தவறா எனப் பெரிய விவாதமே இணையத்தில் நடந்து வருகிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மூல நோய்: அதாவது ஊழியர் ஒருவர் தனக்கு மூலநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தனக்கு லீவ் வேண்டும் எனக் கேட்டுள்ளார். மூலநோய் மோசமானதால் அதீத வலி இருப்பதாகவும் தன்னால் நிற்கவே முடியாது என்றும் அவர் சொல்லி லீவ் கேட்டுள்ளார். இதைக் கேட்ட மேனேஜர், சரி உடம்பு சரி இல்லை என்று தானே சொல்கிறார் லீவ் தரலாம் என முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக ஆதாரத்தைக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர் செய்த செயல் தான் இப்போது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஆதாரத்தைக் கேட்டால் இவர் மருத்துவ சான்றிதழை அனுப்பி இருக்கலாம். அல்லது சிகிச்சை தொடர்பான டாக்குமெண்டுகளை பகிர்ந்து இருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக அவர் தனது பின்புறத்தை போட்டோவாக எடுத்து அனுப்பி இருக்கிறார். மூலநோய்க்கான ஆதாரத்தைக் கேட்டதால் இப்படிச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னாச்சு: இது தொடர்பாக ரெட்டிட் தளத்தில் மேலும் கூறுகையில், "எனக்கு மூல நோய் இருப்பதால் நிற்க முடியாது என்பதால் லீக் கேட்டார். மேனேஜர் ஆதாரத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். இதனால் வேறு வழியின்றி மூலநோய் இருக்கும் பின்புறத்தை போட்டோ எடுத்து அனுப்பினேன்" என்று தெரிவித்தார்.
மேலும், "அனுப்பும் போது தவறு செய்தது போலத் தோன்றவில்லை.. ஆனால், இப்போது நினைத்தால் ஆபாச போட்டோ அனுப்பியதாகப் பிரச்சினை வருமோ என்று அச்சமாக இருக்கிறது. உதவுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்: இதற்கு இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் பலவித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர், "அவர் செய்தது என்ன தவறு.. உடம்பு சரி இல்லை என லீவ் கேட்டால் கொடுக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு கேள்வி கேட்டால் இப்படிதானே செய்ய முடியும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் அவர் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை என்றும் ஒரு வேகத்தில் இப்படிச் செய்து இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் மேனேஜர் மருத்துவ சான்றிதழைக் கேட்டதில் என்ன தவறு என்றும் இந்த ஊழியரே எல்லை மீறியதாகவும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதில் யார் மீது தவறு இருக்கு.. யார் செய்தது தவறு என நீங்க நினைக்கறீங்க.!
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications