“BRICS-ல் இருந்துக்கொண்டு.. டாலரை தாக்குகிறார்கள்!” இந்தியா மீதான வரிக்கு காரணம் தேடிய டிரம்ப்
வாஷிங்டன்: இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் இனி 25% வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். இந்த வரியானது ஆக.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருக்கும் அவர், இதற்கான காரணமாக பிரிக்ஸ் அமைப்பையும், அதில் இந்தியா இடம் பெற்றிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
வரி குறித்து "நினைவில் கொள்ளுங்கள், இந்தியா நமது நண்பனாக இருந்தாலும், அவர்களின் அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தக தடைகள் காரணமாக நாம் அவர்களுடன் மிகக் குறைவான வர்த்தகத்தையே செய்துள்ளோம்.

டிரம்பின் வரி
மேலும், அவர்கள் எப்போதும் ரஷ்யாவிடமிருந்துதான் ராணுவ தளவாடங்களை வாங்குகிறார்கள். உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த அனைவரும் விரும்பும் இந்த நேரத்தில், சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகையால், ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரியும், அபராதமும் செலுத்த வேண்டும். என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் வரி
மசோதா கையெழுத்திடும் நிகழ்வில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வரி விதிப்பு குறித்து அமெரிக்கா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறதா? என்று டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் இப்போது அவர்களுடன் பேசுகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்தியா தான் உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று. அவர்கள் 175 சதவீதம் வரை வரி விதித்துள்ளனர்.
நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். BRICS அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பது நம்பமுடியாததாக இருக்கிறது. இது டாலர் மீதான தாக்குதல். வர்த்தக பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிக்ஸ் மீது பழி
பிரதமர் மோடி எனக்கு நண்பர். ஆனால், அவர்கள் நம்முடன் அதிக வர்த்தகம் செய்வதில்லை. அவர்கள் நிறைய பொருட்களை நமக்கு விற்கிறார்கள், ஆனால் நாம் அவர்களிடம் இருந்து வாங்குவதில்லை. ஏனென்றால், அவர்களின் வரி மிக அதிகம். அவர்கள் இப்போது அதை குறைக்க தயாராக உள்ளனர். ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்த நாட்டுக்கு மிக முக்கியமான நாள். ஏனென்றால், இதுவரை பார்த்திராத அளவுக்கு பணம் அமெரிக்காவுக்கு வரப்போகிறது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக அளவுக்கு வரியை போடுவது உண்மைதான். ஆனால் இதற்கு பின்னால் நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
நியாயமான காரணம்
அதாவது அமெரிக்காவின் டாலர் அளவுக்கு மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு மிக்கதாக இல்லை. 1 டாலர் இந்திய மதிப்பில் ரூ.87.67 ஆக இருக்கிறது. எனவே அவர்கள் குறைந்த அளவுக்கு வர்த்தகம் செய்தாலும் அவர்களால் லாபத்தை எடுக்க முடியும். அதேபோல நமக்கு லாபம் வேண்டும் எனில் அமெரிக்காவுக்கு அதிக வரியை போடத்தான் வேண்டும். இதை குறைத்தால் வணிகத்தில் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications