BRICS unification: பிரிக்ஸ் வைத்த ஆப்பு.. எதிர்பார்க்காத டிரம்ப்! தன் வினை தன்னை சுடும் என்பது இதுதானோ!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகப் பொருளாதாரத்தில் 32% பங்கைக் கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்க டாலருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே பிரிக்ஸ் நாடுகளை குறிவைத்து கலைக்கலாம் என டிரம்ப் செய்த வேலைகள், கடைசியில் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன.

பரஸ்பர வரி விஷயத்தை கையில் எடுத்த டிரம்ப், இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி என தனது சகாக்களுக்கு வரியை போட்டு பாவலா செய்திருந்தார். பின்னர் இந்த வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால் இதே பாணியில் பிரிக்ஸ் நாடுகளுக்கு போடப்பட்ட வரி இன்னும் குறைக்கப்படாமல் அப்படியே தொடர்கிறது.

BRICS Trump US

சொந்த கரன்சியில் வர்த்தகம்

இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் 50% வரி, தென்னாப்பிரிக்காவுக்கு 30% வரி, சீனாவுக்கும் வரி+கூடுதல் பொருளாதார தடைகள், ரஷ்யாவுக்கு மேலும் பல தடைகள் என டிரம்ப் வன்மத்தை கக்கியிருந்தார். இந்த வரிக்கு சில காரணங்கள் இருக்கின்றன. முதல் முக்கிய காரணம், பிரிக்ஸ் நாடுகள் டாலரை பலவீனப்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டுதான். பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள்ளே மேற்கொள்ளும் வணிகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக தங்களது சொந்த கரன்சியில் இந்த வர்த்தகம் நடக்கிறது.

50% வரியை போட்ட அமெரிக்கா

உலக பொருளாதாரத்தில் 32% பங்கை கொண்டிருக்கும் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியை மட்டும் பயன்படுத்தினால், அப்புறம் நாங்க அச்சடிக்கிற பச்சை கலர் டாலர் நோட்டுக்கு என்ன மரியாதை? என அமெரிக்கா கோபப்பட்டு இருக்கிறது. இப்படியே போனால் டாலரின் மதிப்பு 32% அளவுக்கு குறைந்துவிடும் என்பதுதான் டிரம்பின் அச்சம். அது உண்மைதான். எனவே பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரியை போட்டு வழிக்கு கொண்டுவரலாம் என திட்டமிட்டிருக்கிறார். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 50% வரி இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு போடப்பட்டிருக்கிறது.

ஆனால் வழிக்கு கொண்டு வர யோசிக்கப்பட்ட ஐடியா, வழிக்கிட்டு போகும் என்பது அமல்படுத்தப்பட்ட பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.

இந்தியா-சீனா

அட ஆமாங்க.. கீரியும் பாம்புமாக இருந்த சீனா-இந்தியா இப்போது ராசியாகிவிட்டது. இப்படி நடக்கும் என டிரம்புக்கு ஐடியா கொடுத்தவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். மறுபுறம் டிரம்ப் வயிற்றெரிச்சலை கிளப்பும் வகையில் அவ்வப்போது பொருளாதார நிபுணர்கள், டிரம்ப் வரியையும்-பிரிக்ஸ் வளர்ச்சி குறித்த உண்மையையும் பொதுவெளியில் போட்டு உடைத்து வருகின்றனர்.

சமீபத்தில் தலைசிறந்த பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், "டிரம்ப்பின் வரிகள் BRICS நாடுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே இரவில் ஒன்றிணைத்தன" என்று கூறி டிரம்பின் வரி பர்னிச்சரை மொத்தமாக போட்டு உடைத்து காலி செய்திருக்கிறார்.

உடைக்கப்பட்ட வரி பர்னிச்சர்

ஜெஃப்ரி சாக்ஸ் சொன்னது உண்மைதாங்க. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காதீங்க என்று டிரம்ப் எச்சரித்தும் இந்தியா கேட்கவில்லை. எனவே கூடுதல் வரியை இந்தியா மீது போட்டார். நாம் என்ன செய்தோம்? அடுத்த நாளே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தோம். இதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் போனார். இப்போது ரஷ்யா-இந்தியா உறவு முன்னெப்போதைவிட வலுவடைய தொடங்கியுள்ளது. கடந்த 2021 இல் $3 பில்லியனாக இருந்த இருதரப்பு வர்த்தகம் 2024-25 இல் $68 பில்லியனாக ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

இது எல்லாவற்றிற்கும் உச்சமாக, பிரதமர் நரேந்திர மோடியின் சீனாவுக்கான பயணம் அமைய உள்ளது என்பதுதான். இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்காக சீனாவிற்கு பிரதமர் மோடி போகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு மோடி சீனா செல்வது இதுதான் முதல்முறை. இதற்கு காரணம் தலைவன் டிரம்ப்தான்.

ஆக பிரிக்ஸ் நாடுகளை வலுவாக டிரம்ப் கட்டமைக்க தொடங்கியுள்ளார். வரி விஷயம் எல்லாம் வேலைக்கு ஆகாது தலைவா! முழிச்சுக்கோ, பொழச்சிக்கோ என அவரது ஆதரவாளர்கள் டிரம்புக்கு அட்வைஸ் செய்ய தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+