‛வாவ்’.. சனி கிரகத்தை படம் பிடித்த காசினி விண்கலம்! பக்கத்திலேயே பூமி, நிலா! எப்படி இருக்கு பாருங்க!
வாஷிங்டன்: விண்வெளியில் சனிக்கிரகம் எப்படி இருக்கிறது? என்பதையும், சனிக்கிரகத்தின் அருகே வெள்ளி, செவ்வாய், பூமி உள்ளிட்ட கோள்களுடன் துணைக்கோள் நிலவு இருக்கும் வகையிலும் மிகவும் அழகாக காசினி விண்கலம் போட்டோ எடுத்து அசத்தி உள்ளது என நாசா தெரிவித்துள்ளது. தற்போது இந்த போட்டோவை பலரும் பார்த்து சிலிர்த்துப்போய் உள்ளனர்.
விண்வெளி.. பல ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்த பகுதி. தற்போதைய சூழலில் பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ்ந்து வரும் நிலையில் சூரியக்குடும்பத்தில் உள்ள பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை பல நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.

இத்தகைய விண்வெளி ஆய்வில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட பல நாடுகள் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக பெரும் பொருட்செலவில் விண்வெளி கலன்கள் உருவாக்கி புதிய தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் நமது சந்திரயான் -3ன் விக்ரம் லேண்டர் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் நிலவின் தென்துருவத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டு சல்பர், குரோமியம், மாங்கனீஸ், டைட்டானியம் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்தது. குறிப்பாக மனிதன் வாழ உயிர் நாடியாக இருக்கும் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்து அசத்தியது.
இத்தகைய சூழலில் தான் தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்வெளியில் பிரமிக்க வைக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு அசத்தி உள்ளது. இந்த போட்டோவை அமெரிக்காவின் காசினி விண்கலம் படம்பிடித்துள்ளது. இந்த காசினி விண்கலம் என்பது சூரியனில் இருந்து 6வது கிரகமாக இருக்கும் சனி கோள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தை அமெரிக்காவின் நாசா, ஐரோப்பா, இத்தாலி நாட்டின் விண்வெளி நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தி உள்ள திட்டமாகும். தற்போது இந்த காசினி விண்கலம் வெற்றிகரமாக சனி கிரகம் மற்றும் கிரகத்தை சுற்றி இருக்கும் வளையங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் காசினி விண்கலம் சனி கிரகத்தின் வெளிப்புற பகுதியை வியக்க வைக்கும் வகையில் போட்டோ எடுத்துள்ளது.
அதாவது ராட்சத வளையங்கள் கொண்ட சனி கிரகத்தையும், அதன் அருகே வந்த வெள்ளி, செவ்வாய், பூமி மற்றும் நிலவு உள்ளிட்டவற்றை சேர்த்து போட்டோவாக எடுத்து அசத்தி உள்ளது. இதில் சனிக்கோள் மற்றும் அதனை சுற்றிய வளையங்களுடன் பிரமாண்டமாக தெரிகிறது. மாறாக வெள்ளி, செவ்வாய், பூமி, நிலவு உள்ளிட்டவை ஒளிப்புள்ளியை போல் காட்சியளிக்கின்றன.
அதாவது சனிக்கிரகத்தின் இடதுபுறத்தில் மேல்பக்கத்தில் வெள்ளை நிறத்தில் பிரகாசமாக வெள்ளி கிரகமும், அதன் கீழ் மங்கலான சிவப்பு புள்ளியாக செவ்வாய் கிரகமும் தோன்றும். பூமியும், நிலவும் Pale Blue நிற புள்ளியாக சனிக்கிரகத்தின் வலதுபுறத்தின் கீழ் பக்கத்தில் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.

மேலும் இவை அனைத்தும் ஒரே போட்டோவில் இருப்பது போல் நாசா வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ வெளியிட்டுள்ளது. அதில், ‛‛சமீபத்தில் 7,46,000 மைல்கள்(1.2 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருந்து காசினி விண்கலம் சனி கிரகத்தை போட்டோ எடுத்துள்ளது. சிவப்பு, பச்சை மற்றும் நீல நிற பில்டர்களை பயன்படுத்தி சனி கிரகத்தின் இயற்கையான வடிவத்தை படம்பிடித்துள்ளது.
இந்த படத்தில் வெள்ளி, செவ்வாய், பூமி மற்றும் நிலவு உள்ளிட்டவையும் சிறு புள்ளியாக ஒளிவடிவில் தெரியும். 2024 பிப்ரவரி வரை சனி கிரகத்தை ஒவ்வொரு நாள் சூரியன் மறைவின்போதும் நம்மால் பார்க்க முடியும். அப்போது தென்கிழக்கு வானத்தில் மிகவும் பிரகாசமாக மஞ்சள் நிற "நட்சத்திரம்" போல் சனிக்கிரகம் காட்சியளிக்கும்'' என தெரிவித்துள்ளது.
இந்த போட்டோவை பார்க்கும் பலரும் சிலிர்த்துப்போய் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பலரும் வியப்படைந்து விண்வெளியின் ஆய்வின் நுணுக்கத்தையும், விண்வெளியில் இருந்து பிற கிரகங்களின் நகர்வு, அமைப்பு உள்ளிட்டவற்றையும் பார்த்து வியப்படைந்து பாராட்டி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications