காலாவதியாகும் போர் நிறுத்தம்.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் முக்கிய மூவ்! பாகிஸ்தானுக்கு பறந்த டீம்
வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம், நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இது குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள துணை அதிபர் வேன்ஸ் தலைமையிலான டீமை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
வேன்ஸ் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவில், டிரம்பின் மருமகன் மற்றும் முன்னாள் மத்திய கிழக்கு ஆலோசகரான ஜாரெட் குஷ்னர், அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் வெறும் ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் மட்டுமல்ல என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது, ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பது மட்டுமே டிரம்பின் ஒரே நிபந்தனை. "அணு ஆயுதங்களை ஒழியுங்கள். அவ்வளவுதான், இது மிக எளிமையானது" என்று அவர் New York Post பேட்டியில் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஈரானியத் தலைவர்களைத் தானாகவே நேரடியாகச் சந்திக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, "அது நல்லதாக இருக்காது, என்ன நடக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பதால், பேச்சுவார்த்தை ஸ்மூத்தாக போக சான்ஸே இல்லை. போதாத குறைக்கு, ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. எனவே பேச்சுவார்த்தைக்கு ஈரான் வராது என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்கா மீதான நம்பிக்கை இல்லை என்றும், ஹார்முஸ் நீரிணையில் விதிக்கப்பட்டுள்ள கடல்வழித் தடையால் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திட்டம் தற்போது இல்லை என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்கின்றனர். இஸ்லாமாபாத்தில் மிக உயரிய பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் குழு இன்று இரவு அங்கு சென்றடையும்.
ஏற்கனவே ஏப்ரல் 11-12 தேதிகளில் 21 மணிநேரம் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தற்போதுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எனவே, முழு அளவிலான போரைத் தவிர்க்க இதுவே கடைசி வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
-
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி?












Click it and Unblock the Notifications