டிரம்பை உளவு பார்த்த சீனா ஹேக்கர்கள்! அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சி! அமெரிக்க உளவு துறை பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளரான ஜே.டி. வான்ஸ் ஆகியோர் தொலைப்பேசி உரையாடல்களைச் சீன ஹேக்கர்கள் ஒட்டுக் கேட்க முயல்வதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. கடைசிக் கட்ட பிரச்சாரமும் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிபர் தேர்தல்: இதற்கிடையே குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளரான ஜே.டி. வான்ஸ் ஆகியோர் தொலைப்பேசி உரையாடல்களை ஹேக் செய்யச் சீன ஹேக்கர்கள் முயல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் பிரபல நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சீனா ஹேக்கர்கள்: இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த சிலர் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "இந்த ஹேக்கிங் முயற்சி சீன ஹேக்கர்களின் செயல்தான். உளவு சேகரிக்கும் ஒரு முயற்சியாகவே அவர்கள் இதைச் செய்துள்ளனர்" என்றார்.
நம்ம ஊர் ஏர்டெல், ஜியோ போல அமெரிக்காவில் வெரிசோன் டெலிகாம் நிறுவனம் பிரபலமானது. அந்த டெலிகாம் நிறுவனத்தின் நெட்வோர்க்கை ஊடுருவி ஹேக் செய்யும் முயற்சி நடந்துள்ளது. இந்த ஹேக்கிங் முயற்சியில் எதாவது தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து இப்போது விசாரணை தொடங்கியுள்ளது. டிரம்ப் மட்டுமின்றி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது துணை வேட்பாளரான டிம் வால்ஸ் ஆகியோரின் பிரச்சாரத்தைக் குறிவைத்தும் இந்த ஹேக்கிங் முயற்சி நடந்துள்ளது.
வெரிசோன் நிறுவனம் இது குறித்துத் தெளிவான பதிலை அளிக்கவில்லை. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ரிச் யங், "குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் அமெரிக்கத் தொலைத்தொடர்பு நெட்வோர்க்கை குறிவைத்துள்ளது எங்களுக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று மட்டும் தெரிவித்தார்.
யார் அவர்கள்: சீனாவை சேர்ந்த சாட்ல் டைபூன் என்று அழைக்கப்படும் சீன ஹேக்கிங் குழு இதைச் செய்துள்ளது. டிரம்ப்-வான்ஸ் பிரச்சார குழுவில் உள்ள இரண்டு ஊழியர்களின் தொலைப்பேசிகளை ஹேக்கிங் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து எஃப்.பி.ஐ நேரடியாக எந்தவொரு கருத்தும் கூறவில்லை.
அதேநேரம் எஃப்.பி.ஐ மற்றும் சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சீனா அரசுடன் தொடர்புடைய சிலர் அமெரிக்கத் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை அணுக முயன்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்று மட்டும் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தல்: அமெரிக்காவில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சர்வேக்களில் இரு தரப்பிற்கும் இடையே போட்டி கடுமையாகவே இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications