கொரோனா கோரத்தாண்டவம்.. ஒரு நாள் பாதிப்பில் இந்தியா முதலிடம், பிரேசிலில் பலி எண்ணிக்கை கிடுகிடு
வாஷிங்டன்: உலகில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சம் பெற்று வருகிறது. இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இந்தியாவில் 92,998 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 65,200 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பரவ தொடங்கி கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 131,330,341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் இதுவரை 2,858,234 பேர் உலகில் மரணம் அடைந்துள்ளனர்- உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 105,717,846 பேர் மீண்டனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 22,754,261 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

உலகிலேயே கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இந்தியாவில் 92,998 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 12,484,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 514 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 164,655 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 65,200 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,382,172 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 793 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 568,499 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 41,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். போலந்து நாட்டில் கொரோனா தொற்றால் 28,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பை பொறுத்தவரை நேற்று உலகிலேயே அதிகபட்சமாக பிரேசலில் 1931 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் 793 பேரும், போலந்தில் 571 பேரும், இந்தியாவில் 514 பேரும் உக்ரைனில் 396 பேரும், ரஷ்யாவில் 384 பேரும், இத்தாலியில் 376 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications