வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுத்தால் பேரழிவுதான்.. ஜோ பிடன் வார்னிங்

Google Oneindia Tamil News

வாஷிங்ட்ன்: கொரோனா நிவாரண மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட மறுத்தால் பேரழிவு ஏற்படும் என்று அமெரிக்கா அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பிடன் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகளிலேயே கொரோனாவால் மிக மோசன அழிவை சந்தித்திருப்பது அமெரிக்காதான். அமெரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கும் போடப்பட்டு வருகிறது.

Corona pandemic relief Bill- Joe Biden warns of devastating consequences

இதனிடையே கொரோனா நிவாரண மசோதா அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டால் மட்டுமே சட்டமாகும். இதனடிப்படையில் கொரோனா நிவாரண நிதி ஒதுக்கீடுகள் நடைபெறும்.

ஆனால் கொரோனா நிவாரண மசோதாவால் அமெரிக்கர்களுக்கு அதிக பலன் இல்லை என கூறி டிரம்ப் கையெழுத்திட மறுப்பது சர்ச்சையாகி உள்ளது. அத்துடன் அமெரிக்கர்களுக்கான கொரோனா நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும் என்பதும் டிரம்ப்பின் கோரிக்கை.

என்னப்பா இது டிரம்புக்கு வந்த சோதனை.. அதிபர் பதவி பறிபோனதும் டிரம்பை அன்ஃபாலோ செய்த டுவிட்டர் சிஇஓ என்னப்பா இது டிரம்புக்கு வந்த சோதனை.. அதிபர் பதவி பறிபோனதும் டிரம்பை அன்ஃபாலோ செய்த டுவிட்டர் சிஇஓ

டிரம்ப்பின் இந்த இழுபறிக்கு ஜோ பிடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பேரழிவையே இது ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்கர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு காப்பீட்டுகளை இழக்கவும் நேரிடும் என கூறியுள்ளார் ஜோ பிடன்.

English summary
US President-elect Joe Biden has warned that if the President Donald Trump continues to delay signing a Coronavirus economic relief bill will be devastating consequences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X