ஆடிப்போன அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்.. மீண்டும் கோரத்தாண்டவம்.. கொத்துக்கொத்தாக பலி
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1974 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி, பிரான்ஸ், போலந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாவால் பலி மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று சீனாவில் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு இத்துடன் ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இன்று வரை உறுதியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டு பல லட்சம் மக்கள் இதுவரை பலியாகி விட்டனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா கட்டுக்குள் இருந்த பல்வேறு நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. உயிரிழப்பும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் அந்த நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.

5.72 கோடி பேருக்கு பாதிப்பு
தற்போதைய நிலையில் உலகில் கொரோனா தொற்றால் 5,72,06,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 13,64,754 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,96,94,917 பேர் இதுவரை மீண்டுள்ளனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 1,61,46,995 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா 2வது இடம்
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,20,57,774 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 9,004,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா தொற்றால் 59,83,089 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய நாடானா பிரான்சில் கொரோனா தொற்றால் இதுவரை 20,86,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கிடுகிடு
உயிரிழப்பு பல்வேறு நாடுகளில் கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1974 பேர் மரணம் அடைந்துள்ளனர் அதற்கு அடுத்தபடியாக கொரோனா கட்டுக்குள் இருந்த இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 653 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 644 பேர் பலியாகி உள்ளனர். போலந்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 637 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் 584 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர்.

மீண்டும் கொரோனா கிடுகிடு
உலகிலேயே அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 181,099 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 46182 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் 36176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 35,686 பேருக்கும், போலந்தில் 23,975 பேருக்கும், ஜெர்மனியில் 23,676 பேருக்கும், ரஷ்யாவில் 23,610 பேருக்கும், இங்கிலாந்தில் 22,915 பேருக்கும், பிரான்சில் 21,150 பேருக்கும், ஸ்பெயினில் 16,233 பேருக்கும் ஒரு நாளில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் இருந்த ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications