காற்றிலும் கொரோனா வைரஸ் பரவும்.. புதிய ஆய்வு திடுக் எச்சரிக்கை.. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சுமார் 3 மணி நேரம் காற்றில் உயிர்வாழ முடியும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. இதையடுத்து உலக சுகாதார நிறுவனம் (WHO) மருத்துவ நிபுணர்களுக்கான புதிய காற்றுவழி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
Recommended Video
WHOன் நோய்கள் மற்றும் ஜூனோசிஸ் பிரிவின் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சில சிகிச்சை நடைமுறைகளைச் செய்யும்போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை வைரஸ், அருகாமையில் இருக்கும் பாதித்த நபர் மூலமாகவும், அவர் தொடுவதால், பிற பொருட்கள் மீது அமர்ந்தும் பரவும் எனதான் கூறப்பட்டது. இப்போது காற்று வழியாகவும் பரவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்
அதேநேரம், இப்படி வைரஸ் காற்றில் பரவினாலும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என கூறியுள்ளார், மரியா வான் கெர்கோவ். பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் மருத்துவ நடைமுறைகளைச் செய்யும்போது மருத்துவ ஊழியர்கள் இதனால், பாதிக்கப்படக்கூடும். நோயாளியின் தொண்டையில் குழாய் வைக்கப்பட்டு, சுவாசத்திற்கு உதவுவதற்காக சிகிச்சையளிப்பது வழக்கம். அப்போது, இப்படி பரவக்கூடும்.

மருத்துவ பராமரிப்பு
ஒரு மருத்துவ பராமரிப்பு வசதியை உருவாக்கும் செயல்முறையைச் செய்யும்போது, இந்த கிருமி துகள்களை காற்றில் பரவி மருத்துவ பணியாளர்களை தாக்கக் கூடும். ஏனெனில் அவை சிறிது நேரம் காற்றில் இருக்க முடியும் என்று வான் கெர்கோவ் கூறினார். சுகாதாரப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு பணி செய்யும் போது மற்றும் அந்த நடைமுறைகளைச் செய்யும்போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.

பொதுக் கருத்து
நோயால் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது அல்லது இருமல் போன்றவற்றால்தான் வைரஸ் பொதுவாக பரவுகிறது என்பது பொதுவான முன்னெச்சரிக்கை அறிவிப்பு. ஆனால் ஒரு புதிய ஆய்வு கொரோனா வைரஸ், மூன்று மணி நேரம் வரை காற்றில் உயிரோடு இருக்க வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டியது.

முகக் கவசம்
சுகாதாரப் பணியாளர்கள் N95 முகக் கவசங்களை அணியுமாறு பரிந்துரைக்கப்படுகிரது. அனைத்து திரவ அல்லது காற்று வழி துகள்களை 95% வடிகட்ட இந்த மாஸ்க்கால் முடியும். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுப்படி, உலகம் முழுக்க, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை COVID-19 பாதித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications