கொரோனா.. ஒரு நாள் பாதிப்பு.. ரஷ்யாவை முந்தியது இந்தியா.. ஒரே நாளில் 9889 பேருக்கு தொற்று உறுதி
வாஷிங்டன்: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் 7வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கொரோனாவால் ஒரு நாளில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் பட்டியலில் இந்தியா 4 வது இடத்தை பிடித்துள்ளது. இதில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது.
ஜனவரியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,97,140 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 393,102 ஆக உயர்ந்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 32,44,329 ஆக அதிகரித்துள்ளது,

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரானாவால் 1,924,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரானாவால் இதுவரை 110,173 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 7வது இடத்தை இந்தியா பிடித்ததுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலிக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. ஜெர்மனியை முந்தி உள்ளது. ஈரான், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளை விடவும் பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 226,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 275 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
இதனால் கொரோனாவால் நேற்று ஒரு நாளில் அதிக மரணத்தை சந்தித்த நாடுகளில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் 1492 பேருடன் பிரேசில் உள்ளது. அடுத்த இடத்தில் மெக்ஸிகோ 1092 பேருடனும். 3வது இடத்தில்1031 பேருடன்அமெரிக்காவும் , 275 பேருடன் நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கொரோனாவால் அதிக மரணத்தை சந்தித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 6363 பேர் கொரோனாவல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலகில் நேற்று ஒரேநாளில் அதிகம் பேருக்கு தொற்று பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. பிரேசிலில் நேற்று 31890 பேருக்கு கொரோனா பாதித்தது.அடுத்தபடியாக அமெரிக்காவில் 22268 பேருக்கு தொற்று பாதித்தது. இந்தியாவில் 9889 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் ரஷ்யாவை முந்தி உள்ளது இந்தியா.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications