உலகம் முழுவதும் கொரோனாவால் 20.61 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் லட்சத்தை தாண்டிய தினசரி கேஸ்கள்
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 684,678 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 206,157,723 பேராக அதிகரித்துள்ளது.
உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.

கடந்த சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது. ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 557,328 பேர் குணமடைந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 185,038,230 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 10,254 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,346,711 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 975 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று புதிய உச்சம் தொட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 118,668 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதன் மூலம் கொரோனாவால் 37,183,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 30,096,552 பேர் மீண்டுள்ளனர். 6,450,554 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 642 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 635,941 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 32,117,052 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 430,285 பேராகும். ஒரே நாளில் 583 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 31,294,318.
பிரேசில் நாட்டில் மொத்தம் 20,285,067 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா உள்ளது. இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 19,151,021 ஆகும்.
உலக கொரோனா பாதிப்பில் 7வது இடத்தில் உள்ள துருக்கியில் 60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜென்டினா 8வது இடத்தில் உள்ளது. அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.
Recommended Video
கொரோனா முதலில் உருவான சீனாவில் மீண்டும் பரவல் ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 94,161 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications