உலகில் கொரோனாவால் 31.72 கோடி பேர் பாதிப்பு - ஒரே நாளில் 31 லட்சம் பேருக்கு தொற்று!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 3,100,940 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 317,239,669 பேராக அதிகரித்துள்ளது.
உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.

கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெல்டா போய் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை தீவிரமடைய காரணாகியுள்ளது. அந்த வகையில் உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 3,100,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை 317,239,669 பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் கொரோனாவில் இருந்து 1,009,195 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 262,747,081 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 7,794 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,529,752 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,233 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 793,310 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதன் மூலம் கொரோனாவால் 64,297,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 42,785,850 பேர் மீண்டுள்ளனர். 20,644,922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 2,172 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 866,842 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36,312,486 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 484,359 பேராகும். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 34,696,645.
பிரேசில் நாட்டில் மொத்தம் 22,718,606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 21,626,836 ஆகும். ரஷ்யாவில் கொரோனாவால் 1 கோடி பேரும் பிரான்ஸில் 1 கோடிக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யா உள்ளது.
உலக கொரோனா பாதிப்பில் 7வது இடத்தில் உள்ள துருக்கியில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஜெர்மனி 10வது இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 79 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா முதலில் உருவான சீனாவில் மீண்டும் பரவல் ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 104,189 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications