நிம்மதி.. கொரோனா சர்வதேச அவசர நிலை முடிந்தது -உலக சுகாதார அமைப்பு.. ஆனால் இப்படியும் சொல்லியிருக்கே
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவி உலகம் முழுவதும் வியாபித்தது. கொரோனாவை கட்டுப்படுத்த மிகக் கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகளை சீனா முதலில் விதித்தது.

இதைப் பின்பற்றி பிற நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. கொரோனா பெருந்தொற்று பல லட்ச கணக்கான மக்களை பாதித்து பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதையடுத்து, உலக சுகாதார அமைப்பு கொரோனாவை சர்வதேச அவசர நிலையாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அறிவித்தது.
கொரோனா பெருந்தொற்று அதன் பிறகு கிட்டதட்ட பல அலைகளாக வந்து தாக்கியது. தடுப்பூசி முழு வீச்சில் போட தொடங்கிய பிறகே கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கியது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டதோடு.. பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டது.
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், "கொரோனா உலகை மாற்றி விட்டது. நம்மையும் மாற்றிவிட்டது. கொரோனா பெருந்தொற்ற்றின் சர்வதேச சுகாதார அவசர நிலை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கிறோம்.
எனினும் கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த வாரத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிப்பு என்னவென்றால், இனியும் மக்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதுதான்"என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications