பாகிஸ்தானையும் விடாத டிரம்ப் - மோடி.. அலறல் சத்தம் கேட்குதா? கதறிகிட்டு ஓடிவந்த செய்தி தொடர்பாளர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வங்கதேசம் மட்டுமில்லை அண்டை நாடாக இருந்து கொண்டு நமக்கு குடைச்சல் தரும் பாகிஸ்தானையும் அமெரிக்காவில் இருந்து கொண்டு அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் கதறவிட்டுள்ளனர். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்ற நிலையில் பிரதமர் மோடி இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

PM Modi Donald Trump pakistan

அதன்பிறகு இருவரும் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பற்றி விவாதித்தனர். அதேபோல் வர்த்தகம் ரீதியாகவும், பாதுகாப்பு துறை ஏற்றுமதி தொடர்பாகவும் பேசினர். அதன்படி இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் எஃப் 25 ரக போர் விமானத்தை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் என்பது கையெழுத்தாகி உள்ளது.

இந்த சந்திப்பிக்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வங்கதேச ஆட்சி மாற்றம் தொடர்பாக பற்றி டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛வங்கதேச விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. வங்கதேசத்தை பிரதமர் மோடியே பார்த்து கொள்வார்'' என்று கூறினார். இதன்மூலம் வங்கதேச விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. பிரதமர் மோடியே பார்த்து கொள்வார் என்பதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். இதனால் வங்கதேசம் கதற தொடங்கி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க வங்கதேசம் மட்டுமில்லை. நம் நாட்டின் இன்னொரு எதிரியான பாகிஸ்தானையும் பிரதமர் மோடி - அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அலற வைத்துள்ளனர். அதாவது பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்க சிறையில் இருக்கும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரும், கனடா குடியுரிமை பெற்றவ பயங்கரவாதி தஹாவூர் உசேன் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.

இவர் யார் என்றால் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவன் தான். இந்த தாக்குதலில் 165 பேர் இறந்தனர். இதுதொடர்பாக மோடி - டிரம்ப் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் பாகிஸ்தானை விளாசியிருந்தனர்.

அதில், ‛‛மும்பை தாக்குதல் குற்றவாளிகள், பதான் கோட் தாக்குதல் குற்றவாளிகள் எல்லோரையும் சட்டத்தின் முன் கொண்டு வர பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இனியும் கட்டவிழ்த்து விடக்கூடாது. உடனடியாக பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தான் பயங்கரவாததத்தின் ஆணிவேராக உள்ளதாக பல நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அதனை பிரதிபலிக்கும் வகையில் மோடி - டொனால்ட் டிரம்பின் அறிக்கை என்பது இருந்தது.

மேலும் ‛‛பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அல் குவைதா, ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பயங்கரவாத அமைப்புகள் தான் உலக நாடுகளுக்கு முதன்மையான அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டிய நிலை உள்ளது. அனைத்து மூலைகளிலும் பயங்கரவாதம் என்பது ஒழிக்கப்பட வேண்டும்'' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பாகிஸ்தானை கதறவிட்டுள்ளது. மோடியும், டொனால்ட் டிரம்பும் ஒரே நேரத்தில் பாகிஸ்தானை பயங்கரவாத செயல்களுடன் ஒப்பிட்டு கூறியதை பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் கதற தொடங்கி உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஷப்தர் அலி கான் அளித்த பேட்டியில், ‛‛எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று எங்களை பார்த்து சொல்கிறார்கள். மோடி-டிரம்ப் கூட்டறிக்கை ஒரு தலைபட்சமானது. தவறானது. இது ராஜதந்திர விதிமுறைகளுக்கு எதிரானது. அடிப்படை ஆதாரத்துக்கு எதிரானது.

இந்தியா நடத்தி வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், வெளிநாடுகளுக்குள் புகுந்து செய்யும் கொலைகளை நைசாக மூடி மறைத்து இருக்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட மைனாரிட்டி மக்களுக்கு எதிராக நடக்கும் வெறுப்பு மோதல்களையும் மறைத்து விட்டனர்'' என கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுத தயாரிப்பு தொழில்நுட்பங்களை அமெரிக்கா தருவதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்படி ஆயுதங்களை குவிப்பது, நாடுகள் இடையேயான பதற்றத்தை தேவையின்றி அதிகரிக்க செய்யும் என்று பாகிஸ்தான் கதறி வருகிறது.

இந்த கதறலுக்கு பின்னால் இன்னொரு விஷயமும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்க நிதி உதவி செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாகிஸ்தானில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான 845 மில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இது ஏற்கனவே பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான சூழலில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து இருப்பதாக மோடி - டிரம்ப் கூறியிருப்பதை அந்த நாட்டால் சகித்து கொள்ள முடியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+