த்ரெட்ஸ் இப்படித்தான் உருவானது.. மெட்டாவை கிண்டல் செய்த நெட்டிசன்.. எலான் மஸ்க் ரியாக்ஷனை பாருங்க!
வாஷிங்டன்: ட்விட்டருக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் 'த்ரெட்ஸ்' என்ற புதிய சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ள சூழலில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஸுக்கர்பர்க் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ட்விட்டரில் ஒரு ட்வீட்டைப் பதிவு செய்தார். த்ரெட்ஸ் பற்றி எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து தெரியுமா?
சமூக வலைதளங்களின் வரிசையில் புதிதாக இன்று நுழைந்திருக்கிறது மெட்டா நிறுவனத்தின் 'த்ரெட்ஸ்'. ட்விட்டருக்கு மாற்றாக கருதப்படும் த்ரெட்ஸ், இன்ஸ்டாகிராம் பயனர்கள் எளிதில் சைன் அப் செய்ய வசதியாக அமைந்துள்ளது. இதனால், 'த்ரெட்ஸ்' அறிமுகமான வேகத்தில், உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் அதற்குத் தாவியுள்ளனர்.

மெட்டா நிறுவனம் 'த்ரெட்ஸ்' ஆப்பை அறிமுகம் செய்துள்ள சூழலில் மெட்டா தலைவர் மார்க் ஸுகர்பர்க் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக ஒரு ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில் ஒரே ஒரு மீம் படத்தை மட்டும் மார்க் பகிர்ந்தார்.
அதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தன்னைப் போன்றே இன்னொரு உருவத்தை எதிர்கொள்ளும் ஃபேஸ் ஆஃப் காட்சி இடம் பெற்றுள்ளது. அது தவிர அந்த ட்வீட்டில் எவ்வித கேப்ஷனும் இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் போதே அது ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் களம் இறங்கியதைக் குறிக்கும் வகையிலேயே பதிவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

த்ரெட்ஸை களத்தில் இறக்கிய கையோடு மார்க், ட்விட்டரில் இந்த இந்த சம்பவம் டெக் களத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்நிலையில், த்ரெட்ஸ் ஆப், அப்படியே ட்விட்டரின் அப்பட்டமான காப்பியாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
டெக் உலகில் பணியாற்றும் நெட்டிசன் ஒருவர், மெட்டாவின் புதிய ஆப், கீபோர்டின் இந்த படன்களை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒரு படத்தை வெளியிட்டு கிண்டல் செய்தார். அந்த கீபோர்டில் Ctrl, C, V ஆகிய பட்டன்கள் மட்டுமே உள்ளன. அதாவது ட்விட்டரை காப்பி, பேஸ்ட் செய்து த்ரெட்டை உருவாக்கியுள்ளதாக அவர் விமர்சித்திருந்தார்.

அந்த ட்வீட்டிற்கு, ட்விட்டர் ஓனர் எலான் மஸ்க், சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். மார்க் ஸுக்கர்பெர்க் பதிவிட்ட ஸ்பைடர்மேன் மீமுக்கு ரிப்ளையாக எலான் மஸ்க்கின் பரோடி அக்கவுண்டில் இருந்து அப்பட்டமான Ctrl+V என்றும் ரிப்ளை கொடுக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications