கனடாவில் தரையிறங்கும் போது தலைகுப்புற கவிழ்ந்த விமானம்.. பயணிகள் பலர் காயம்! விபத்து நடந்தது எப்படி?
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கனடாவில் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விமான விபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கனடாவின் டொரண்டோவிற்கு புறப்பட்டது. Endeavor Air flight 4819 என்ற இந்த விமானத்தில் 80 பயணிகள் பயணித்துள்ளனர். விமானம் டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் அப்படியே தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில், விமானத்திற்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில், 17 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த பயணிகளை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்து எப்படி நடந்தது
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து தற்போது வரை உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. இந்த விமான விபத்து தொடர்பாக டொரண்டோ விமான நிலையம் கூறியதாவது: - மெனியோபோலிஸ் நகரில் இருந்து வந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் விபத்துக்குள்ளான நிகழ்வை நாங்கள் அறிந்துள்ளோம். அவசர குழு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பனிப்புயல் காரணமா
கனடாவில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. அந்த வகையில் டொரண்டோவிலும் பனிப்புயல் வீசியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
விமானம் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சிகளும், தீ பிடிக்காதவறு தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விமான விபத்து காரணமாக டொரண்டோ விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு காலதாமதம் ஆகியுள்ளது. அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகவும் விமான சேவை பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications