வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்ரூடோவிடம் கோபத்தை காட்டினாரா ஜி ஜின்பிங்.. நடந்தது இதுதான்..சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜி 20 உச்சி மாநாட்டின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் உங்களிடம் நேர்மை இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கடிந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த உச்சி மாநாட்டில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கலந்துகொண்டன.

 பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பருக்கு.. மோசமான பக்கவாத பாதிப்பு.! ஒரு பக்க முகம் செயலிழந்தது! பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பருக்கு.. மோசமான பக்கவாத பாதிப்பு.! ஒரு பக்க முகம் செயலிழந்தது!

முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில்

முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில்

குறிப்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா, அர்ஜெண்டினா, கனடா, இந்தோனேசியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ, தென்கொரியா, ஜப்பான், துருக்கி, சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் ஒன்றாக ஜி 20 மாநாடு கருதப்படுகிறது.

டின்னர் நேரத்தில் சந்தித்து..

டின்னர் நேரத்தில் சந்தித்து..

இதனால், இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் தலைவர்கள் கலந்து கொண்டது. அங்கு பேசிய விவரங்கள் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு இடையே தலைவர்கள் ஒருவொருக்கொருவர் சந்தித்துப் பேசினர். இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து கை குலுக்கிக் கொண்டனர். இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் டின்னர் நேரத்தில் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

ஜி ஜின்பிங் கோபித்துக்கொண்டதாக

ஜி ஜின்பிங் கோபித்துக்கொண்டதாக

அதேபோல், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒருவொருக்கொருவர் சந்தித்து பேசியதை காண முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் கோபித்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசிய ஜி ஜின்பிங், இரு நாடுகள் நடைபெறும் விவாதங்கள் உள்பட அனைத்து தகவல்களும் வெளிவந்து விடுகின்றன.

வெளிப்படத்தன்மையுடன்

வெளிப்படத்தன்மையுடன்

இது சரியானதாக இல்லை. உங்களிடம் நேர்மை இல்லை என்று ஜி ஜின்பிங் காட்டமாக கூறியதாகவும் இதற்கு பதில் அளித்த ஜஸ்டின் ட்ரூடோ, எங்கள் நாட்டில்(கனடாவில்) வெளிப்படத்தன்மையுடன் இருக்கிறோம். அதையே நாங்கள் நம்புகிறோம். இதை தொடர்ந்து செய்வோம்" என்று பதிலளித்தாக கூறப்பட்டது. இது தொடர்பான செய்திகளும் சமூக வலைத்தளங்களிலும் பரபரபாக பேசப்பட்டது.

நீங்கள் சுட்டிக்காட்டும் அந்த வீடியோ

நீங்கள் சுட்டிக்காட்டும் அந்த வீடியோ

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடா பிரதமரை சீன அதிபர் ஜி ஜின்பிங் விமர்சிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:- நீங்கள் சுட்டிக்காட்டும் அந்த வீடியோ ஜி 20 உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களுக்கு இடையேயும் நடைபெற்ற மிகவும் குறிய பேச்சுவார்த்தையாக இருந்தது.

கனடா நடவடிக்கை எடுக்கும்

கனடா நடவடிக்கை எடுக்கும்

இது மிகவும் இயல்பான ஒன்றாகும். இதைவைத்துக்கொண்டு சீன அதிபர் விமர்சித்தார் என்றோ குற்றம் சாட்டினார் என்றோ புரிந்து கொள்ள வேண்டும் என நான் கருதவில்லை. சம அடிப்படையில் நடைபெறும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை சீனா ஆதரிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த கனடா நடவடிக்கை எடுக்கும் என்று சீனா நம்புகிறது. சீனா பிற நாடுகளின் உள் விவகாரங்களில் ஒருபோதும் தலையிடுவதில்லை என்பதை நான் வலியுறுத்திக்கொள்கிறேன்" என்றார்.

ஜஸ்டின் ட்ரூடோ தனது கவலையை..

ஜஸ்டின் ட்ரூடோ தனது கவலையை..

கனடா தேர்தலில் சீனா தலையிட்டதாகவும் உளவு பார்த்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ தனது கவலையை முன்வைத்ததால் இந்த அதிருப்தி எழுந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. எனினும், இருதலைவர்களுக்கும் இடையேயான இந்த உரையாடலுக்கு இந்த விவகாரம்தான் காரணமாக அமைந்ததா என்பதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் செய்தி தொடர்பாளர் விளக்கமாக கூறவில்லை.

English summary
Chinese President Xi Jinping scolded Canada's Prime Minister Justin Trudeau for not being honest during the G20 summit, and China's Ministry of Foreign Affairs has given its side of the story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X