2020ல் நடந்த சம்பவத்திற்கு பழி தீர்த்த டிரம்ப்.. கமலாவை காலை வாரிய மாகாணங்கள் எவை எவை?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இதில் அதிக வாக்குகளை கொண்ட கலிபோர்னியா, டெக்சாஸ், ஃபளோரிடா, நியூயார்க், பென்சில்வேனியா ஆகியவை தான் வெற்றியை தீர்மானிக்கின்றன. இதில் 30 வாக்குகளை கொண்ட ஃபளோரிடாவில் டிரம்ப் வெற்றி பெற்றார். இதேபோல் 40 ஓட்டு உள்ள டெக்சாஸில் வென்றார்.
அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் 2016 முதல் 2020 வரை அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் அப்போது மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கினார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவில்லை.. அவருக்கு பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் இறங்கி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற நிலை இருந்தது. இதில் வெற்றியை தீர்மானிக்கும் மாகாணங்கள் என்றால், டெக்சாஸ், கலிபோர்னியா, ஃபளோரிடா, நியூயார்க், பென்சில்வேனியா ஆகியவை தான். இங்குதாள் அதிக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உதாரணமாக அமெரிக்காவிலேயே அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் 54 எலக்ட்ரோல் வாக்குகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக டெக்சாஸ் மாகாணம் இருக்கிறது. இங்கு 40 எலக்ட்ரோல் வாக்குகள் உள்ளன. அடுத்ததாக ஃபளோரிடா மாகாணத்தில் 30 வாக்குகள் உள்ளன. இங்கு டிரம்ப் தான் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறையும் இங்கு டிரம்ப் தான் வெற்றி பெற்றார். அடுத்ததாக பெரிய மாகாணம் என்றால் நியூயார்க் மாகாணம் தான். இங்கு மொத்தம் 28 வாக்குகள் உள்ளன. இதேபோல் பென்சில்வேனியாவில் 19 வாக்குகள் உள்ளன. இதுவும் வெற்றியை தீர்மானிக்கும் மாகாணம் ஆகும்.
கடந்த 2020 தேர்தலை எடுத்து பார்த்தால், 54 வாக்குகள் உள்ள கலிபோர்னியாவில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். 40 வாக்குகள் உள்ள டெக்சாஸில் டிரம்ப் வெற்றி பெற்றார். நியூயார்க் மாகாணத்தை பொறுத்தவரை 2020ம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதேபோல் பென்சில்வேனியா மாகாணத்தை பொறுத்தவரை மொத்தம் 20 வாக்குகள் உள்ளன. கடந்த முறை இங்கு ஜோ பைடன் வெற்றி பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் மொத்தம் 306 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தார். ஆனால் டொனால்ட் டிரம்ப் 232 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் இந்த முறையும் 2020ம் ஆண்டு நிலவரப்படியே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இருந்தன. அதேநேரம் பாட்டில் நெக் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் கடந்த முறை தோற்ற டிரம்ப் இந்த முறை வென்றுள்ளார். இதேபோல் அரிசோனா, மிக்சிகன், விஸ்கான்சின், நெவேடா, வடகரோலினா, ஜார்ஜியாவில் டிரம்பின் கை ஓங்கியது. இதுதான் கமலாவின் தோல்வி முகத்திற்கு காரணமாக மாறியது. தற்போதைய நிலவரப்படி, டொனால்ட் டிரம்ப் 267 இடங்களிலும், கமலா ஹாரிஸ் 224 இடங்களிலும் வென்று முன்னிலையில் இருக்கிறார்கள். வெறும் 3 இடங்களில் வென்றாலே டிரம்ப் அதிபர் ஆவார் என்பதால் , அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications