அலறிய அமெரிக்கா.. டிரம்ப் அடித்த அந்தர்பல்டி.. H-1B விசா கட்டணத்தில் டாக்டர்களுக்கு விலக்கு! பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பணி நிமித்தமாக வருவோருக்கு வழங்கப்படும் எச் 1பி விசா கட்டணத்தை டொனால்ட் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு பணிக்காக செல்வோர் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் டிரம்பின் இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கே ஆபத்தாக மாறி உள்ளது. இதனால் எச் 1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்றும் வகையில் எச் 1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதன் காலஅவகாசம் 3 ஆண்டுகளாகும். அதன்பிறகு 3 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.1.75 லட்சமாக இருந்தது. ஆனால் இந்த கட்டணத்தை டொனால்ட் டிரம்ப் ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றுவோருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது. ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அவர்களால் எச் 1பி விசாவை பெற முடியும்.
அமெரிக்காவின் எச் 1பி விசா திட்டத்தில் இந்தியர்கள் தான் அதிகம் பயனடைந்து வந்தனர். எச் 1பி விசாவை அமெரிக்காவில் பயன்படுத்தும் வெளிநாட்டினரில் 71 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளன. இதனால் டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா சென்று பணியாற்ற வேண்டும் என்ற கனவில் உள்ளவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே கிராம பகுதிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இப்படியான சூழலில் வெளிநாட்டில் இருந்து வரும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களால் இந்த தொகையை செலுத்த முடியாது. இதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து விசா கட்டண உயர்வில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும் போது, "அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளன. அதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள் என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications