கேர்ள் பிரண்ட் உடன் "தனிமையில்" இருந்த இளைஞனை சுட்ட நாய்? உண்மையில் என்ன நடந்தது! வினோதத்தின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு இளைஞர் ஒருவர் தனது நாயைப் பாசமுடன் வளர்த்து வந்த நிலையில், அந்த நாயே இவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளது. கேரள் பிரண்ட் உடன் இருந்த அந்த நபரை நாய் சுட்ட சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் அந்த நபர் கூறுவது உண்மை தானா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்

நாய்களை வளர்க்கும் பெரும்பாலானோர் அதைக் குழந்தை போலவே வளர்ப்பார்கள். நாய்களை வீட்டிற்கு வெளியே கட்டிப்போடுவது உள்ளிட்டவை பெரியளவில் குறைந்துவிட்டது. நாயும் கிட்டதட்ட குடும்பத்தில் ஒரு உறுப்பினரைப் போலவே பெரும்பாலான வீடுகளில் இருக்கும். அவை வீட்டில் எல்லா இடங்களுக்கும் செல்லும். பெட்ரூமில் படுத்துத் தூங்கும்.. அதற்குத் தனி சாப்பாடும் கிடைக்கும்.

US America offbeat

நாய்கள்

நம்ம ஊரிலேயே இந்த கலாச்சாரம் வந்துவிட்டது என்றால் வெளிநாட்டில் யோசித்துப் பாருங்கள். அமெரிக்காவில் எல்லாம் பிள்ளைக்குப் பதிலாகக் கூட பலரும் நாய்களை வளர்ப்பார்கள். ஆனால், செல்ல பிராணிகளான நாய்களுக்கு மனிதர்களைப் போல எல்லாம் தெரியாது. சில நேரங்களில் அவை செய்யும் செயல்கள் நம்மை பெரிய சிக்கலில் சிக்கவைத்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை அவரது வளர்ப்பு நாய் சுட்டுள்ளது. ஆமாம், மனிதர் நாயைச் சுடவில்லை.. நாய் தான் அதன் உரிமையாளரைச் சுட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தனது பெண் தோழியுடன் படுக்கையில் படுத்திருந்தபோது வளர்ப்பு நாய் தன்னைச் சுட்டதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

படுக்கையில் கேர்ள் பிரண்ட்

அதாவது துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்குக் காயமடைந்த நபர் அலறி துடித்துக் கொண்டு இருந்த நிலையில், அவரது வளர்ப்பு நாயான ஓரியோவும் அங்கு இருந்துள்ளது. அதேநேரம் அங்கு துப்பாக்கி எதுவும் கண்டறியப்படவில்லை. இது குறித்து போலீஸ் கேட்ட போது, தனது கேர்ள் பிரண்ட் துப்பாக்கியை எடுத்து சென்றதாக அந்த நபர் கூறியிருக்கிறார்.

அவர் அடுத்துச் சொன்ன விஷயம் தான் போலீசாருக்கே தலைசுற்றலை கொடுத்துள்ளது. அதாவது அவர், "நானும் எனது கேர்ள் பிரண்டும் படுக்கையில் படுத்திருந்தோம். அப்போது ஓரியோ (வளர்ப்பு நாய்) விளையாட வந்தது. ஜாலியாக குதித்து விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அதன் பாதம் துப்பாக்கி டிரிக்கரில் சிக்கிக் கொண்டது. நாங்கள் பதறிப் பிடுங்க போனோம். அப்போது ஏற்பட்ட குழப்பத்தின் போது துப்பாக்கி வெடித்து சிதறியது" என்றார்.

தொடையில் பாய்ந்த தோட்டா

இதனால் அந்த நபரின் தொடையில் தோட்டா பாய்ந்துள்ளது.. இருப்பினும், இதனால் அவருக்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தை விபத்து மூலம் ஏற்பட்ட துப்பாக்கி சூடு என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அசாதாரண சம்பவம்

தனக்கு நேர்ந்த அசாதாரண சம்பவம் குறித்து அந்த நபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது ஒரு அசாதாரண விபத்து.. இது ஒரு விசித்திரமான சம்பவம்.. எனது நாய் எப்போதும் விளையாட்டுத்தனமாக இருக்கும்.. நாய் ஜாலியாக விளையாடும் போது எதிர்பாராத விதமாகத் துப்பாக்கியில் குதித்ததால் துப்பாக்கி வெடித்துச் சிதறியது" என்றார்.

விசாரணை

இதற்கிடையே அந்த நபர் சொல்வது உண்மை தானா இல்லை வேண்டும் என்றே மாற்றி கூறுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறு யாராவது காப்பாற்ற இதுபோல சொல்கிறாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

அதேநேரம் நாய் மனிதரைச் சுடுவதாகச் செய்தி வெளியாவது இது முதல்முறை இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கன்சாஸில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வேட்டைத் துப்பாக்கியை மிதித்ததால் 30 வயது நபர் உயிரிழந்தார். அதேபோல 2018ல் வளர்ப்பு நாய் துப்பாக்கியை மிதித்ததில் அதன் உரிமையாளர் காலில் குண்டு பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+