வரியை குறைக்க முன்வந்த இந்தியா.. காலம் கடந்து விட்டது என உருட்டும் டிரம்ப்!
நியூயார்க்: இந்தியாவுக்கு 50% வரியை போட்டு டிரம்ப் மிரட்டி வருகிறார். இது குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக சீனாவும் இந்த வரிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியா வரியை குறைக்க முன் வந்திருப்பதாகவும், ஆனால் காலம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த அளவிலான வணிகத்தையே செய்கிறோம். இதை மிகச்சிலர்தான் சரியாக புரிந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா எங்களுடன் மிக அதிக அளவில் வணிகம் செய்கிறார்கள். அதாவது, அவர்கள் எங்களிடம் பெரும் அளவில் அளவில் பொருட்களை விற்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தான் மிகப்பெரிய "வாடிக்கையாளர்". ஆனால் நாங்கள் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம். இதுவரை, இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான உறவாக உள்ளது.

பல ஆண்டுகளாக இது இப்படியே நீடித்து வருகிறது. இதற்குக் காரணம், இந்தியா இதுவரை எங்களிடம் மிகவும் அதிகமான வரியை (tariff) விதித்து வந்ததுதான். இது வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மிக அதிகமாகும். இதனால், எங்களது நிறுவனங்களால் இந்தியாவில் பொருட்களை விற்க முடியவில்லை. இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான அழிவு பாதை! மேலும், இந்தியா தனது எண்ணெய் மற்றும் ராணுவத் தயாரிப்புகளில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது, அமெரிக்காவிடம் இருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது.
இப்போது அவர்கள் தங்கள் வரிகளை பூஜ்யமாகக் குறைப்பதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், இது மிகவும் தாமதமாகிவிட்டது. அவர்கள் இதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இவை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சில எளிய உண்மைகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
ஆம் டிரம்ப் சொல்வது உண்மைதான். அமெரிக்காவுக்கு நாம் அதிகமான வரியை விதிக்கிறோம். காரணம், நம்முடைய கரன்சியும் அமெரிக்க கரன்சியும் சமமான மதிப்பு கிடையாது. இன்றைய தேதியில் ரூ.87.96 கொடுத்தால்தான் ஒரு அமெரிக்க டாலரை வாங்க முடியும். மட்டுமல்லாது சர்வதேச அளவில் வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்திய கரன்சி கிடையாது. எனவே பலமான கரன்சி கொண்ட நாடுகளுடன் வர்த்தகம் செய்யும்போது வரியை அதிகமாகத்தான் போட முடியும்.
இதைத்தான் டிரம்ப் தற்போது எதிர்க்கிறார். என்ன எதிர்த்தாலும் வரியை குறைக்காமல் இருந்தால்தான் அமெரிக்காவை சரியாக கையாள முடியும் என்று கூறும் சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் மத்திய அரசு கறாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications