Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நண்பர் மோடி'.. ஹிந்துக்கள் மீது கமலா, ஜோ பைடனுக்கு அக்கறை இல்லை.. டிரம்ப் தீபாவளி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு ஹிந்துக்கள் மீது அக்கறையில்லை என்றும்,கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை நிராகரித்து விட்டனர் என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும் என தான் நம்புவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற போகிறது. அங்கு ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும், டிரம்புக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். யாா் வெற்றி பெறுவார்கள் என்பதே தெரியாத அளவிற்கு நிலைமை அங்கு இருக்கிறது. மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

donald trump diwali 2024 us election 2024 kamala harris joe biden

இதனிடையே முன்னாள் அதிபா் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில்,அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமாலா ஹாரிஷ்க்கு ஹிந்துக்கள் மீது அக்கறையில்லை. வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்க விடமாட்டேன்.

donald trump diwali 2024 us election 2024 kamala harris joe biden

அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கமலாவும், பைடனும் புறக்கணித்துவிட்டார்கள். இஸ்ரேல் தொடங்கி உக்ரைன் வரை பல்வேறு முக்கிய விவகாரங்களில் கமலாவும், ஜோ பைடனும் பெரிய இடராக நமக்கு அமைந்துவிட்டார்கள். ஆனால், நான் ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம். வலிமை மூலம் உலகில் அமைதியை திரும்பக் கொண்டு வருவோம்."

இடதுசாரிகளின் மத எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து அமெரிக்க ஹிந்துக்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். ஹிந்துக்களின் விடுதலைக்காக நாங்கள் போராடுவோம். எனது நிர்வாகத்தின்கீழ், இந்தியாவுடனான நமது அளப்பறியா பங்களிப்பையும், எனது நல்ல நண்பர் பிரதமர் மோடியுடனான உறவையும் நாம் நிச்சசயம் வலுப்படுத்துவோம்

donald trump diwali 2024 us election 2024 kamala harris joe biden

கமலா ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சிறு வணிகத்தையெல்லாம் அதிக வரி விதிப்பு நடவடிக்கைகளால் அழித்துவிடுவார். ஆனால், என்னுடைய தலைமையிலான நிர்வாகத்தின்கீழ், வரி ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன்மூலம், வரலாற்றில் மிகச்சிறந்த பொருளாதாரமாக அமெரிக்கா கட்டமைக்கப்படும். மீண்டும் அமெரிக்காவை சிறப்பான தேசமாக்குவோம். அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி நல் வாழ்த்துகள். தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்" இவ்வாறு டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+