இந்தியாவில் டிரம்ப் நிறுவனம் செய்யும் மெகா முதலீடு.. லிஸ்டில் இரு தென்னிந்திய நகரம் உட்பட 6 நகரங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், அந்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறப்பவர். இதற்கிடையே டிரம்ப் நிறுவனம் இப்போது இந்தியாவில் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. குறிப்பாக இரு தென்னிந்திய நகரங்களில் டிரம்ப் டவர் இப்போது அமைய உள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வென்று, அந்நாட்டின் 47வது அதிபராகியுள்ளார். டிரம்ப் அமெரிக்காவில் மிகப் பெரிய தொழிலதிபர் ஆவர். அவர் ரியல் எஸ்டேட் துறையில் அங்குச் சாதித்தவர்.

அமெரிக்காவில் பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களை அவரது நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவைத் தாண்டியும் இந்தியா உட்பட பல நாடுகளில் டிரம்ப் முதலீடு செய்து இருக்கிறார்.
இந்தியாவில் டிரம்ப் நிறுவனம்: இதற்கிடையே டிரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனம் இப்போது இந்தியாவில் மிகப் பெரிய முதலீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்கு வெளியே அதிக டிரம்ப் டவர்ஸ் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் நிலையில், இப்போது மேலும் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
டிரம்பின் இந்திய பார்ட்னரான டிரிபெகா டெவலப்பர்ஸ் நிறுவனம் இப்போது புனே, குருகிராம், நொய்டா, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் 8 மில்லியன் சதுர அடியில் ஆறு புதிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களை முடித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ₹15000 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் 3 டிரம்ப் டவவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
6 நகரங்கள்: டிரம்பின் இந்திய பார்ட்னரான டிரிபெகா டெவலப்பர்ஸ் ஏற்கனவே மும்பை, புனே, குருகிராம் நகரங்களில் மொத்தம் 3 திட்டங்களை முடித்துள்ளது. இந்தச் சூழலில் தான் அந்த 3 நகரங்களிலும் மேலும் ஒரு திட்டத்தை டிரிபெகா டெவலப்பர்ஸ் மேற்கொள்ளவுள்ளது. இது தவிர நொய்டா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் முதல்முறையாகக் கட்டுமானத்தை மேற்கொள்ளவுள்ளது. இருக்கிறது. ஆக மொத்தம் 6 டிரம்ப் டவர்கள் புதிதாக இந்தியாவில் வரவுள்ளது.
இது தொடர்பாக டிரிபெகா டெவலப்பர்ஸ் நிறுவனர் கல்பேஷ் மேத்தா பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "அமெரிக்காவிற்கு வெளியே அதிக டிரம்ப் டவர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.. இப்போது புதிதாக ஆறு டவர்களை கட்டவுள்ளோம். புதிய திட்டங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். புனே, குருகிராம், நொய்டா, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் இந்த திட்டங்கள் அமையும். டிசம்பர் தொடக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்" என்றார்.
இந்தியா வரும் டிரம்ப்: இந்த திட்டங்களுக்காக டிரம்பை அழைத்து வரும் பிளான் எதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், "ஆம், இதற்கான பணிகளும் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகன் எரிக் டிரம்பை இந்தியா அழைத்து வர முயல்கிறோம். அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியா வருவார்கள். டிரம்ப் டவர்கள் ஏற்கனவே இருக்கும் நகரங்களில் புதிய கட்டுமானம் டிரம்ப் உலக டவர் என்று அழைக்கப்படும்" என்றார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications