ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தெரிகிறது. இதனை உறுதி செய்வது போல மத்திய கிழக்கில் பெருமளவில் அமெரிக்க வீரர்களை குவித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்தி அங்குள்ள யுரேனியத்தை மீட்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி வந்த அமெரிக்கா, அந்த நாட்டின் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி போர் தொடுத்தது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல் தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஈரான் தலைவர் அயேதுல்லா அலி கமேனியை அமெரிக்கா கொன்ற நிலையில், அதற்கு பழி வாங்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.

ஈரான் மீது தாக்குதல்
இஸ்ரேல் மீதும் ஈரான் குண்டு மழை பொழிந்து வருகிறது. உலகின் மிக முக்கிய வர்த்தக வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்ததால் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் வெளிப்படையாக சொல்ல தயங்குவதாகவும் டிரம்ப் கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் விதமாக, ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடந்து வருகிறது. ஆனால் ஒருபக்கம் ஈரான் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் போர் நிறுத்தப்படும் என்றும், முடிவு எங்களுடையது எனவும் தெரிவித்தது. இதற்கு அமெரிக்கா எந்த வித பதிலும் அளிக்கமால் இருந்தது. ஆனால் ரகசியமாக ஈரானை பணிய வைக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஈரான் மீது தரைவழி தாக்குதல்?
தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தெரிகிறது. இதனை உறுதி செய்வது போல மத்திய கிழக்கில் பெருமளவில் அமெரிக்க வீரர்களை குவித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஈரான் மீது தரைவழி தாக்குதல் நடத்தி அங்குள்ள யுரேனியத்தை மீட்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தப்படக்கூடிய சுமார் 970 பவுண்ட் (440 கிலோ) அளவிலான செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரானில் இருந்து கைப்பற்றுவதற்காக தரை வழி தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும்
போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு நிபந்தனையாக, யுரேனியத்தை ஒப்படைக்க ஈரானை வற்புறுத்த தனது ஆலோசகர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளதாகவும், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் இது தொடர்பாக கூறியதாக தெரிவிக்கப்படுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடிய யுரேனியத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.
ஈரான் அதை ஒப்படைக்காவிட்டால், "வலுக்கட்டாயமாக கைப்பற்றுவது" பற்றியும் அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பாகிஸ்தான் மூலமாகவும் இதர மத்தியஸ்தர்கள் வழியாகவும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுவருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். "ஒரு ஒப்பந்தம் மிக விரைவில் ஏற்படலாம்," என்றும் அவர் கூறியுள்ளார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications