முகத்தில் இடித்த மைக்கை விடுங்க.. எலான் மஸ்க் மகனால் ஹெலிகாப்டரில் நிலைத்தடுமாறி விழப்போன டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் காசா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர் அவரது முகத்தில் மைக்கால் இடித்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது. ஆனால் அதற்கு முன்பாக டொனால்ட் டிரம்ப் ஹெலிகாப்டரில் இருந்த கால் தவறி விழப்போன சம்பவம் நடந்துள்ளது. இதற்கு எலான் மஸ்க்கின் 4 வயது மகன் செய்த சம்பவம் தான் முக்கிய காரணம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பு வகித்து வருகிறார். உலகிலேயே பெரிய வல்லரசு நாடாக அமெரிக்கா உள்ளது. இதனால் அமெரிக்க அதிபராக இருக்கும் நபரை சாதாரணமாக யாராலும் நெருங்க முடியாது. இப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்து வருகிறார்.

donald trump us america

ஏற்கனவே அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. இதனால் தற்போது டொனால்ட் டிரம்ப்புக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூட சில சம்பவங்கள் டொனால்ட் டிரம்பின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது.

அப்படியான ஒரு சம்பவம் தான் இன்று நடந்தது. அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாலஸ்தீனத்தின் காசாவை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளார். காசா மக்களை ஜோர்டான், எகிப்து நாடுகள் ஏற்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதனை அந்த நாடுகள் மறுத்துவிட்டன. அதேபோல் இஸ்லாமிய நாடுகளும் காசா மக்களை வெளியேற்றும் டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமின்றி இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து காசாவை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் எகிப்து தயாரித்த வரைவு திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஏற்கவில்லை. இதற்கிடையே தான் அமெரிக்காவின் ஜாயின்ட் பேஸ் அண்ட்ரூஸ் என்ற இடத்தில் டொனால்ட் டிரம்பிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் காசா குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பத்திரிகையாளர் தான் வைத்திருந்த மைக்கை டொனால்ட் டிரம்ப்பின் முகத்தின் அருகே எடுத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மைக் அவரது முகத்தில் மோதியது. இதில் ஒரு செகண்ட் டிரம்ப்பின் முகம் மாறியது. அவர் தனது புருவத்தை உயர்த்தி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன்பிறகு அவர் அந்த நிருபரின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது ‛‛இவர் இன்று இரவு தொலைக்காட்சியை ஆக்கிரமிப்பார். இன்று இரவுக்கான பெரிய செய்தியாக அவர் இருப்பார்'' என்று கூறினார். அதுமட்டுமின்றி கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரிடம், ‛‛நீ அதை பார்த்தாயா?'' என்று பதில் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப்பின் முகத்தில் பெண் நிருபர் தனது மைக்கால் இடித்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் டொனால்ட் டிரம்பை கொலை செய்யும் முயற்சியாக இது இருக்குமோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஒருவர், ‛‛டொனால்ட் டிரம்ப் அடுத்த சில மணிநேரங்களில் மர்மமான முறையில் இறந்தால், நான் இந்த மைக் சம்பவத்தை நிகழ்த்திய நபரை தான் குற்றம்சாட்டுவேன்'' என்று கூறியுள்ளார். இன்னொருவரோ, ‛‛இதுபற்றி விசாரிக்க வேண்டும். மைக்கில் விஷம் என்பது கூட இருந்து இருக்கும். சத்தம் மோசமாக வருகிறது'' என்று கூறினார். இதனால் டொனால்ட் டிரம்பின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி என்பது ஏற்பட்டுள்ளது. இந்த மைக் சம்பவம் தொடர்பான வீடியோ பரவி வரும் சூழலில் தான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

donald trump us america

அதாவது டொனால்ட் டிரம்ப் ஜாயின்ட் பேஸ் அண்ட்ரூஸ் பகுதிக்கு செல்வதற்காக வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டார். அப்போது அவருடன் எலான் மஸ்க்கின் 4 வயது மகன் உடன் சென்றார். டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளி தரையில் நடந்து சென்றார். அவர் பின்னால் எலான் மஸ்க்கின் 4 வயது மகன் குதித்தபடி நடந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தார்.

அதன்பிறகு ஜாயின்ட் பேஸ் அண்ட்ரூஸ்க்கு செல்ல டொனால்ட் டிரம்ப் தயாராக இருந்த ‛மரைன் ஒன்' ஹெலிகாப்டரில் ஏற தயாரானார். முதலில் எலான் மஸ்க்கின் 4 வயது மகன் ஹெலிகாப்டரில் ஏறும் வகையில் டொனால்ட் டிரம்ப் உதவி செய்தார். அப்போது டிரம்ப ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு வசதியாக இருந்த முதல் படிக்கட்டில் காலை வைத்தார். அப்போது திடீரென்று அவர் நிலைத்தடுமாறி கீழே விழும்படி சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை. இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே தான் தற்போது இணையதளத்தில் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க்கின் 4 வயது மகனுடன் ஹெலிகாப்டரில் ஏறச்செல்லும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் டிரம்ப்பை பின்தொடரும் எலான் மஸ்க்கின் மகன் துள்ளிக்குதித்தபடி மகிழ்ச்சியாக நடந்து செல்கிறார். இது இருவருக்கும் இடையேயான பந்தத்தை குறிக்கிறது என்று கூறும் நெட்டிசன்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாத்தாவாக மாறிவிட்டார் என்றும் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ, டொனால்ட் டிரம்புக்கு ஒரே நாளில் 2 சம்பவங்கள் நடந்துள்ளது. ஒன்று பத்திரிகையாளர் ஒருவர் டிரம்ப் மீது மைக்கை இடித்துள்ளார். இன்னொன்று எலான் மஸ்க்கின் மகனுக்கு உதவி செய்யப்போய் டிரம்ப் நிலைத்தடுமாறி உள்ளார். இது டிரம்பின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பி உள்ளது. இத்தகைய பாதுகாப்பு குறைபாடுகளை வெள்ளை மாளிகை சரிசெய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+