டிரம்பின் மூக்கை உடைத்த இந்தியா.. குவாட் மீட்டிங்கிற்கு டெல்லி வரமாட்டாராம் - தி நியூயார்க் டைம்ஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் விரைவில் நடைபெற உள்ள ‛குவாட்' கூட்டமைப்பின் உச்சி மாநாட்டுக்கு டிரம்ப் வரமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மோடி கொடுத்த 3 முக்கிய பதிலடி தான் காரணமாகும்.

உலக நாடுகள் பல்வேறு கூட்டமைப்புகளை அமைத்துள்ளன. அதில் ஒன்று தான் குவாட் (Quad) கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பில் மொத்தம் 4 நாடுகள் உள்ளன. ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

donald-trump-has-reportedly-dropped-plans-to-attend-the-quad-summit-in-india-says-the-new-york-time

ஒவ்வொரு ஆண்டும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு நாடுகளில் நடக்கும். சீனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாடு நம்நாட்டில் நடைபெற உள்ளது. டெல்லியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அவர் இந்தியாவுக்கு வரும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‛தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. இந்தியாவுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரியால் நம் நாட்டில் இருந்து அங்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் பெருமளவு சரிவை சந்திக்கும். இதனால் டிரம்ப் மீது நம் நாடு கோபமடைந்துள்ளது. இது முதல் காரணமாகும்.

இரண்டாவது காரணம் என்னவென்றால் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார். இந்த விவகாரத்தில் இந்தியா அதனை ஏற்கவில்லை. பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போரை நிறுத்தினோம் என்று மத்திய அரசு பலமுறை கூறிவிட்டது. இது டிரம்பை டென்ஷனாக்கி உள்ளது.

3வது காரணம் என்னவென்றால் கடந்த ஜூன் 17 ம் தேதி மோடியிடம் டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக பெருமையாக கூறியதோடு, பாகிஸ்தான் தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் நீங்களும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கெஞ்சினார். அதற்கு மோடி மறுத்துவிட்டார்.

இந்த 3 விஷயங்களால் டிரம்ப் அப்செட்டில் உள்ளார். உலகின் பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவின் அதிபராக இருக்கிறேன். ஆனால் இந்தியா மட்டும் நான் சொல்வதை எதையும் கேட்கவில்லையே என நொந்துபோயுள்ள டிரம்ப் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+