ரஷ்யாவுக்கு ஆதரவு? உக்ரைனுக்கான உதவியை நிறுத்தும் அமெரிக்கா? ஜெலன்ஸ்கியை கேலி செய்த டிரம்ப் மகன்
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு, அமெரிக்கா உதவி வருகிறது. இந்நிலையில் தான் இன்னும் சில வாரங்களில் உக்ரைனுக்கான அமெரிக்காவின் அலோவன்ஸ் நிறுத்தப்படும் என்று டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் போர் 3வது ஆண்டை கடக்கும்.

உக்ரைனை ஒப்பிடும்போது ரஷ்யா ராணுவம், ஆயுத படையில் மிகவும் பெரியது. ஆனாலும் கூட உக்ரைன் 2 ஆண்டுகளை கடந்தும் ரஷ்யாவை சமாளித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்வது தான்.
அதோடு உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை கோபப்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோபைடன் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடனின் ஜனநாயக கட்சி தோல்வியடைந்துள்ளது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார்.
கமலா ஹாரிசை வீழ்த்தி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று செயல்பட உள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது பிரசாரத்தின்போது மீண்டும் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் நிறுத்துவேன் என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் எங்கும் போர் வந்திருக்காது என்றும் கூறினார்.
இந்நிலையில் தான் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் கிண்டல் செய்துள்ளார். இவர் யார் என்றால் டொனால்ட் டிரம்ப் - இவானா டிரம்பின் மூத்த மகன் ஆவார். அடிப்படையில் தொழிலதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் ஜூனியர், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை விமர்சனம் செய்து தனது வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடம் இருந்து பெரும் அலோவன்ஸை இழக்க நேரிடும். இந்த அலோவன்ஸ் தொகை இன்னும் சில வாரங்களில் நிறுத்தப்படும். டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றவுடன் உக்ரைனுக்கான ராணுவ பட்ஜெட் ரத்து செய்யப்படும்'' என கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் இந்த பதிவு தற்போது பேசும் பொருளாக உள்ளது. ஏனென்றால் ரஷ்யாவின் போரை சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
மேலும் அமெரிக்கா சார்பில் பிப்ரவரி 2022ம் ஆண்டு முதல் உக்ரைனுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன் மட்டுமின்றி பல நாடுகளுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதற்காக மட்டும் ஆண்டுக்கும் 64 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா செலவு செய்து வருகிறது. இதனை சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இப்படியான கருத்தை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப் அதிபரானதும், மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் உக்ரைனுக்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்த தனது தந்தைக்கு அழுத்தம் கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை உக்ரைனுக்கான அமெரிக்காவின் நிதி உதவி நிறுத்தப்படும் பட்சத்தில் அது அந்த நாட்டுக்கு பெரிய பாதிப்பாக மாறும். அதோடு நிதியுதவி நிறுத்தப்படுவது என்பது ரஷ்யாவுக்கு ஆதரவாக பார்க்கப்படும்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications